ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கு விசாரணையை மேற்கொண்டு
நடத்தக்கூடாது என்று கூறிய, சென்னை ஐகோர்ட் இன்று அவ்வழக்கை ரத்து செய்து
உத்தரவிட்டது.
கடந்த 2002-ல் திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மற்றும் 6 பேர் மீது பொடா
வழக்கு தொடரப்பட்டது. கியூ பிரிவு போலீஸ் தொடர்ந்த இவ்வழக்கில், வைகோ மீதான
பொடா குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என சீராய்வு கமிட்டி முடிவு
செய்ததையடுத்து பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது.>
ஆனால், இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை பொடா நீதிமன்றம்
ஏற்க மறுத்து விசாரணையை தொடர்வதாக கூறியது. பொடா நீதிமன்றத்தின் இந்த
முடிவை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை
பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை
அணுகுமாறு கூறியது.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 7 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக மேற்கொண்டு
விசாரணை நடத்தக்கூடாது என்று கடந்த மாதம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வைகோ உள்ளிட்டோர் மீதான
பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. பொடா வழக்கை திரும்ப பெற முடியாது
என்று சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.maalaimalar.com/2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக