வெள்ளி, 17 அக்டோபர், 2014

மத்திய அரசு :swiss கருப்பு பண இந்தியர்களின் பெயரை வெளியிட முடியாது !

புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது. பெயர்களை வெளியிடுவது அந்த தகவலை அளித்த அந்த நாடுகளுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்த பட்ட விசாரணை முகமைகளுடன் மட்டுமே விவரங்களை பகிர்நது கொள்ள முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை அடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வ¬த்துள்ளது. சொந்த காசுல  சூனியம் வைக்க அவிங்களுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா என்ன ?
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மனுதாரரான ராம் ஜெத்மலானி வன்மையாக கண்டித்துள்ளார். மோடி அரசின் இரட்டை நிலையை காட்டுவதாகவும், கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை பாதுகாக்கும் செயலை மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: