வெள்ளி, 17 அக்டோபர், 2014

நடிகர்களுக்கு அழைப்புக்குமேல் அழைப்பு கொடுக்கும் பாஜக :வீரமணி கண்டனம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் கட்சிகளை பார்த்தால் மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட முறைகளான மேல்முறையீடுகள், ஜாமீன் போன்றவைகள் மூலம் தான் வெளிவர முயற்சிக்கலாமே தவிர, அபத்தங்களை வாசகங்களாக்கி உலா விடுதல் சரியானதுதானா?இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு. ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாக தன்னை மாற்றிக்கொண்டு, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப்பிடிக்கும் திட்டமிட்ட ‘அதிபுத்திசாலியாக‘ மாறிட துடியாய் துடிக்கிறது.இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிடர் இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது. காலம் புரிய வைக்கக்காத்திருக்கிறது’’என்று கூறியுள்ளார் nakkheeran,in

கருத்துகள் இல்லை: