மத்தியில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும்,
அதன் சட்ட அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டார். ஊழலற்ற
நிர்வாகம், திறந்த நடைமுறை, விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்
வகையில் முட்டுக்கட்டைகளாக இருக்கும் நடைமுறையில் இல்லாத காலாவதியான
சட்டங்களை அகற்ற வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இதனையடுத்து நீதிபதி
ஏ பி ஷா தலைமையிலான சட்ட கமிஷனிடம் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை
தாக்கல் செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதன் பேரில் ஏ.பி.ஷா
தலைமையிலான சட்ட கமிஷன் ஆய்வு செய்து கடந்த மாதம் தனது முதல் அறிக்கையை
தாக்கல் செய்தது.
அதில் வழக்கத்தில் இல்லாத 72 சட்டங்களை அகற்றிவிடலாம் என பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தனது இரண்டாவது அறிக்கையை தாக்கல் செய்தது. இதுகுறித்து அதன் தலைவர் ஏ பி ஷா கூறுகையில், மீண்டும் நாங்கள் ஆய்வு செய்ததில் 88 சட்டங்களை முழுமையாகவும், 25 சட்டங்களை பகுதியாகவும் நீக்கிவிடலாம் என புதிதாக பரிந்துரை செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.தற்போது 167 பழைய சட்டங்களை ஏ.பி.ஷா கமிஷன் மறு ஆய்வு செய்து வருகிறது. அவற்றின் மீதான பரிந்துரைகள் மூன்றாவது அறிக்கையாக அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக