ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா, செயலாளராக குஷ்பு தேர்வு

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகாவும் செயலாளராக குஷ்புவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சின்னத்திரை தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தற்போது இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள வி.எம்.ஏ., கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராதிகா–குஷ்பு இக்கூட்டத்தில் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுபோல் சங்கத்தின் செயலாளராக நடிகை குஷ்பு போட்டியின்றி தேர்வானார். சங்கத்தின் பொருளாளராக டி.ஆர். பாலேஸ்வர், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார், இணை செயலாளர்களாக இ.ராமதாஸ், டி.வி.சங்கர் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், பி.சீனிவாசன், மனோபாலா, சீனிவாசலு, மதி ஒளி குமார், வெங்கடாச்சலம், ஜெயக்குமார், செய்யாறு ரவி, வினயா கிருஷ்ணன், ஜெயவேல், சதீஷ் ஆகியோர் தேர்வானார்கள்.
சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழுவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டைகளை ராதிகாவும், குஷ்புவும் வழங்கினார்கள். dailythanthi.com

கருத்துகள் இல்லை: