செவ்வாய், 14 அக்டோபர், 2014

அரசியல் கட்சிகளும் மத்திய மாநில அரசுகளும் கண்டு கொள்ளாத குழந்தை தொழிலாளர்களும் சத்தியார்த்திகளும் ? ?

விதிஷா: குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுத்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த, ம.பி.,யைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.இந்த மகிழ்ச்சியை நாடே கொண்டாடி வரும் நிலையில், கைலாஷின் சொந்த ஊரான விதிஷாவில், இன்னும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள், தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர், கைலாஷ் சத்யார்த்தி. . No PM ever felt it important to call him for discussions ( even as they were meeting Film stars) and ask him what needs to be done to give children their rights And guess who nominated him for the Nobel prize this year? Indian Parliament? BJP? Congress? RSS? VHP? MP government ( his home state)? Rajiv gandhi Foundation? NO. He was nominated by EUROPEAN PARLIAMENT So in nutshell he won this Nobel peace prize entirely due to his efforts and despite the Government/Media/Civil Society ( largely, because some people from the civil society did help him along). But today we all want a piece of his fame and glory. Who knows there might be a queue of Bollywood producers outside his door
பொறியியலில் பட்டம் பெற்ற இவர், குழந்தை தொழிலாளர்களின் அவலநிலை கண்டு, மனம் வெதும்பினார்.இதையடுத்து, குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுத்த கைலாஷ், 1980ல் அதற்கான தனி அமைப்பையும் துவங்கினார். அதன் மூலம், ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களை கல்வி பயிலச் செய்தார். இதுவரை, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள், இவரால் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.கைலாஷின் சாதனையை பாராட்டி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும், இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளன. இந்நிலையில், உலகின் மிக உயரிய விருதான, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், கைலாஷின் பெயரும் இடம் பெற்றது.

சமீபத்தில், இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், கைலாஷுக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெண் கல்விக்காக குரல் கொடுத்து, தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான, பாக்., சிறுமி மலாலாவுடன், இந்த பரிசை கைலாஷ் பகிர்ந்து கொண்டார்.இதையடுத்து, கைலாஷின் பெயர், நாடு முழுவதும் பரவியது. அவரின் சாதனையை பாராட்டும் வகையில், விதிஷா மாவட்டமே விழாக்கோலம் பூண்டது. இத்தனை கொண்டாட்டங்களுக்கு நடுவில், விதிஷாவில் இன்னும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லாமல், தினக் கூலிகளாக பணியாற்றி தங்கள் வாழ்வை தொலைத்து வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, தனியார் அமைப்பினர் நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விதிஷாவின் பல இடங்களிலும் உள்ள டீ கடைகளில், 13 வயதுக்கும் குறைவான ஏராளமான சிறுவர்கள் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமின்றி பல இடங்களில், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாடே, கைலாஷின் சாதனையை கொண்டாடும் அதே நேரத்தில், அவரின் சொந்த ஊரான விதிஷாவில், இன்னும் குழந்தை தொழிலாளர் முறை ஒழியவில்லை. மாறாக, மற்ற இடங்களை விட அங்கு இப்பிரச்னை தலை துாக்கியுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கைலாஷின் உறவினர், உமேஷ் சர்மா கூறுகையில், ''கைலாஷ், ஏராளமான குழந்தை தொழிலாளர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்துள்ளார். நாங்கள் மட்டும் போராடினால் போதாது. அரசாங்கமும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமோ, பொதுமக்களோ, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்காததே இதற்கு காரணம். அனைவரும் சேர்ந்து செயலாற்றினால் மட்டுமே, பல அரிய சாதனைகள் புரிய முடியும்,'' என்றார்.

வருத்தம்:

இதுகுறித்து, விதிஷா மாவட்ட கலெக்டர் எம்.பி.ஓஜா கூறுகையில், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இப்பிரச்னை முடிவுக்கு வரும்,'' என்றார்.செயற்கரிய சாதனை புரிந்து, நோபல் பரிசு பெற்ற கைலாஷை, நாடே போற்றும் இந்த நேரத்தில், அவரின் சொந்த ஊரிலேயே இன்னும் குழந்தை தொழிலாளர் முறை ஒழியாதது, அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: