சமூக வலைதள பிரச் சாரத்தில் திமுக தலைவர்
கலைஞரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம், 2.65 லட்சம் விருப்பங்களுடன்
(லைக்ஸ்) முன்னணி வரி சையில் உள்ளது. தகவல் களை உடனடியாக பதிவ திலும் மற்ற
இளம் அரசி யல் தலைவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல் படுகிறது.
சமூக வலைதளங்க ளின் தாக்கம், இப்போது
அரசியலிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாக மாறிவிட்டது. இத னால், சமூக
வலைதள பக்கங்களில் இணையும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் அதிக ரித்து
வருகிறது.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும்
பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களில், திமுக தலைவர் கலைஞ ரின் பக்கம்
(kalaignar karunanidhi) https://www.facebook.com/Kalaignar89 உச்சத்தை
தொட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணி வரை, 2 லட்சத்து 62
ஆயிரத்து 192 விருப்பங்களுடன் (லைக்ஸ்), முகநூலின் அதிகாரபூர்வ
அங்கீகாரமான வெரி பைட் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. அவரது ட்விட்டர் பக்கம்,
28 ஆயி ரத்து 700 பின்பற்றுவோ ரைக் கொண்டு, தினமும் புதிய தகவல் பதிவுடன்
இளமையுடன் செயல்படு கிறது.
கலைஞரின் முகநூல் பக்கத்தின் ஸ்டேட்டஸ்
மற்றும் அப்டேட்களும் முன்னணியில் உள்ளன. ஒவ்வொரு நாளும் தவறா மல் அப்டேட்
செய்யப் பட்டு, புதிய ஸ்டேட்டஸ் மற்றும் படங்கள் பதிவா கின்றன. கட்சியின்
அறிக் கைகள், பங்கேற்கும் கூட் டங்கள், பேச்சு, தொண்ட ருக்கான கடிதம்,
முக்கிய அறிவிப்பு மற்றும் அரிய நிழற்படங்கள் உடனுக் குடன் பதிவு
செய்யப்படு கின்றன.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர்
ரஜினிகாந்த், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங் கிரஸ்
தலைவர் ஞான தேசிகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந் தரராஜன், தேமுதிக
தலைவர் விஜயகாந்த், காங்கிரஸின் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட
பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்க ளின் செயல்பாடுகளும் லைக்
மற்றும் அப்டேட்க ளும், கலைஞர் பக்கங் களை எட்ட முடியாத நிலையில்தான்
தற்போது உள்ளன.
முகநூல் பக்கத்துக்கு அவரது பதிவுகள் கட்
சியினரின் விவாதத்தில் விடப்படுகிறது. பெரும் பாலான கமெண்ட்கள் எடிட்
செய்யப்படாமல் அப்படியே விடப்படுகின் றன என்பது கலைஞரின் பக்கத்தின்
சிறப்பாகும். புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற இரு கருத்துகளையும் பார்த்து,
மக்கள் மனநிலையை கலைஞர் நேரடியாக தெரிந்துகொள்கிறார்.
மேலும் ஹேஷ்டேக் எனப்படும் குறிப்புத்
தகவலை ட்விட்டரிலும், டிரென்ட் தகவல்களை முகநூல் பக்கத்திலும் அவ்வப்போது
பதிவு செய்வதில் கலைஞர் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக