கடந்த
4.07.2013 அன்று வீட்டில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றபோது, மகளை
அழைத்துச் சென்றார் உஷா சாந்தினி. அப்போது அவரது மகள் மாயமானார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பதறிய உஷா சாந்தினி, சுற்றும் முற்றும் தேடி
பார்த்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில்
உஷா சாந்தினி வீட்டி-ருந்து மூன்றாது வீடான அமல்ராஜ் வீட்டில் இருந்து
இன்று (06.07.2013) துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சிவகங்கை டவுன்
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
வீட்டின் சமையல் அறையில் உள்ள சுவரில் இருந்து நாற்றம் வீசியது. அதனை
உடைத்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மாயமான சிறுமியின் உடல் என அறிந்தனர்.
இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர்.
தலைமறைவான
அமல்ராஜை தேடி வருகின்றனர். அமல்ராஜை பற்றி போலீசார் கூறுகையில்,
அமல்ராஜுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய செக்ஸ் டார்ச்சர் தாங்க
முடியாமல் அவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த
அமல்ராஜ், சிறுமியை கடத்தி பா-யல் பலாத்காரம் செய்தாரா என்று சந்தேகம்
எழுகிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்தால்தான் அதுபற்றி முடிவு செய்யப்படும்
என்றனர்.
நா.ஆதித்யன் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக