ஞாயிறு, 30 ஜூன், 2013

குன்னூர் மாஜிஸ்திரேட் கைது! பெண் போலீஸ் மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிவிட்டாராம் ! விளங்கிடும் !

பள்ளிபாளையம்:திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி
ஏமாற்றி விட்டதாக பல்லடம் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில், குன்னூர்  மாஜிஸ்திரேட் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பல்லடம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணி புரிபவர் உமா மகேஸ்வரி. இவர் பல்லடம்  டிஎஸ்பி சுரேஷ்குமாரிடம் கடந்த வாரம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் நாகர்கோவிலில் எஸ்ஐ ஆக பணியாற்றிய போது எனக்கும் ஈரோடு மாவட்டம் பவானி அம்மாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் தங்கராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் பல  முறை உல்லாசமாக இருந்தார்.வக்கீலாக இருந்த தங்கராஜ், மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு பெற்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தார். நானும் அவருக்காக நாகர்கோவிலில்  இருந்து பணியை மாற்றி கொண்டு இங்கு வந்து விட்டேன். இங்கு வந்த பிறகுதான் தங்கராஜ் எனக்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணை  திருமணம் செய்து என்னை மோசம் செய்து விட்டார் என்பது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உமா மகேஸ்வரி  தெரிவித்து இருந்தார்.


புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து குன்னூர் சென்று தங்கராஜை போலீசார் தேடினர். அங்கு அவர்  இல்லாததால் பல இடங்களில் விசாரித்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள தட்டாங்குட்டையில் உள்ள உறவினர்  மாதேஸ்வரன் என்பவர் வீட்டில் தங்கராஜ் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து பல்லடம் போலீசார் குமாரபாளையம் வந்து தங்கராஜை இன்று கைது  செய்து அழைத்து சென்றனர். திருமணம் செய்வதாக கூறி பெண் எஸ்.ஐ.யை ஏமாற்றிய மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: