திங்கள், 1 ஜூலை, 2013

ஒன்இந்தியா இணையதளத்துக்கு சிறந்த வெப் மீடியா விருது

பெங்களூர்: ஒன்இந்தியா இணையதளத்துக்கு ஆண்டின் சிறந்த வெப் மீடியா விருது கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மீடியா மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்புக்கான கவுன்சில் இந்த விருதினை வழங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இந்த கவுன்சில் விருதுகளை வழங்கி வருகிறது. அதில் சிறந்த வெப் மீடியாவுக்கான விருது ஒன்இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில் அதிக அளவிலான செய்தித் தளங்களைக் கொண்டுள்ள ஒரே இணையதளம் ஒன்இந்தியாதான் என்பது நினைவிருக்கலாம். ஒன்இந்தியா போல பல்வேறு தரப்பினருக்கும் பெங்களூர் கன்ட்ரி கிளப்பில் நடந்த எழில்மிகு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர் விருது டிஎன்ஏவின் சுமன் சர்மா, ஹைவே சேனலின் ஆசிஷ் ஜெயின், டெய்னிக் பாஸ்கரின் ஹர்ஷ் பாண்டே ஆகியோருக்குக் கிடைத்தது. ஆண்டின் சிறந்த வாராந்திர செய்தித் தாளுக்கான விருதுக்கான விருதினை சுதி தர்ஷினி பெற்றது. வளரும் டிஜிட்டல் நியூஸ் சேனலுக்கான விருது எம்ஜி டெலிவிஷன் பெற்றது. சிறந்த எப்எம் ரேடியோவுக்கான விருது மேற்கு வங்கத்தின் பிரபலமான ஏ டிவி பெற்றது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்திக்கு இந்தியாவின் தூதர் விருது வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் பிரதமர் தேவே கெளடா பெற்றார். விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், ஆர்ட ஆப் லிவிங் அமைப்பின் சுவாமி ஜத்தேவ், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டன

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: