வியாழன், 4 ஜூலை, 2013

பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்றமும் கிடுக்கி பிடி

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!

 திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை  எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங் கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.
நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்
இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால் அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்கின்றனர்.
தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.
பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை: