வெள்ளி, 5 ஜூலை, 2013

அரசின் இலவசங்களை தடைசெய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் அரசுகள் மக்களுக்கு அளித்துவரும் இலவசங்களை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சுப்ரமணியம் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது கலர் டி.வி.க்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய ஸ்டவ்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. அதனையடுத்து அமைந்த அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது லேப்டாப்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தடை செய்ய வேண்டும் என சுப்ரமணியம் பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போதை சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை வழங்குவதாக தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளிப்பதை ஊழல் நடைமுறையாக கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பதை கண்காணித்து ஒழுங்குப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை அமைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் வாக்காளர்களை கவர்ந்து இழுத்து ஓர் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால், ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடுகிறது என்றும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: