
போபால்: வேலைக்காரருடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சர் ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜியின் (79 வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று ராகவ்ஜி மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அமைச்சர் ராகவ்ஜி என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். மேலும் அவரது ஆட்கள் இருவரும் என்னுடன் உறவு வைத்துக் கொண்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். அமைச்சரின் பங்களாவில் பணியாற்றிய தன்னுடைய நண்பர் அமைச்சர் தன்னுடன் உறவு கொண்டதை வீடியோவாக எடுத்த சிடியையும் அந்த வேலைக்காரர் போலீசாரிடம் அளித்தார். இருப்பினும் போலீசார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் ராகவ்ஜியை ராஜினாமா செய்யுமாறு வலியறுத்தினார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நீர்பாசனத் துறை அமைச்சர் ஜெயந்த் மால்யாவிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக