திங்கள், 7 மே, 2012

வழக்கு எண்18/9.ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது.

நிஜத்திலும் நெகிழ்ச்சி!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(04.05.12) ரிலீஸான படம் வழக்கு எண்18/9. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. கோடம்பாக்கத்து இயக்குனர்கள் பலரும் இந்திய தரத்திற்கு ஒரு படம் என்று இந்த படத்தை பாராட்டியுள்ளனர். குடும்பம் குடும்பமாக சென்று வழக்கு எண் 18/9 படத்தை பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.பாலாஜி சக்திவேல் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்ட, இயக்குனர் லிங்குசாமி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். பாலாஜி சக்திவேல் சாமுராய், காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கினார்.  வழக்கு எண் 18/9 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று(07.05.12) இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வழக்கு எண் 18/9 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது ”நான் எடுத்த இந்த படம் வெற்றியடைந்ததற்கு லிங்குசாமியும் ஒரு காரணம். படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி என்ற வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. இப்போது நான் இங்கு செய்யப்போகும் செயல் சரியா? தவறா? எனத் தெரியவில்லை” எனக் கூறி லிங்குசாமியை பத்திரிக்கையாளர்கள் அருகில் அழைத்து,  அனைவரது காலிலும் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து வணங்கினார்.படத்தில் அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்த பாலாஜி சக்திவேல் படத்தின் சக்சஸ் மீட்டிலும் அதை செய்யத் தவறவில்லை.

கருத்துகள் இல்லை: