வியாழன், 10 மே, 2012

வீதியெங்கும், நாள் முழுவதும் குதூகல டான்ஸ்!

ம்ம்ம் வாழ தெரிஞ்சவங்க அல்லது கொடுத்து வைச்சவங்க . நாம பேசாம நம்ம கலாசார சம்பிரதாயங்களை தூக்கி வச்சுகுனு ஆனா நாக்கை தொங்க போட்டுகுனு இதையெல்லாம் வெறிச்சு வெறிச்சு பாப்போம் .

Viruvirupu,
பிரிட்டனின் கான்வாலில் உள்ள, ஹெல்ஸ்டன் டவுனில் இந்த ஆண்டுக்கான ஃபுளோரா தின கொண்டாட்டங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்து முடிந்துள்ளன.
பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் மிகப் பழமையான கொண்டாட்டம் இது. இப்படியான பழைய நிகழ்வுகளில் மிகச் சிலவே இன்றும் நடைபெறுகின்றன என்பதால், ஃபுளோரா தினத்துக்கு மவுசு அதிகம். பழமை விரும்பிகள் தவறவிட மாட்டார்கள். அதே நேரத்தில் இளைய தலைமுறையினரையும் காணலாம். டைரக்டர் ஷங்கருக்கு தெரிந்திருந்தால், ஒரு டூயட் சீன் எடுத்திருப்பார். அந்தளவுக்கு கலர்ஃபுல் பிளஸ் டான்ஸ்!


காலை 7 மணிக்கே வீதி களைகட்டி விடுகிறது..
ஹெல்ஸ்டன் ஒரு மிகச் சிறிய சோம்பலான டிப்பிகல் பிரிட்டிஷ் நகரம். ஒவ்வொரு ஆண்டும் மே 8-ம் தேதி, ஃபுளோரல் தின டான்ஸ் நடைபெறும்போதே, நகரம் ஓஹோ என்று காணப்படும். அன்னைய தினத்துக்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் வருவார்கள். நாள் முழுவதும் டான்ஸ் களைகட்டும்.

ஹெல்ஸ்டன் டவுன் இசைக் குழுவினர்
காலை 7 மணிக்கே வீதிகளில் முதல் ரவுண்ட் டான்ஸ் துவங்கிவிடும். அதன்பின் வீதி வீதியாக டான்ஸ் நடப்பதுடன் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் டான்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கொண்டாட்டத்துக்கு வரும் அனைவரும் ஆட வேண்டும் என்றில்லை, வேடிக்கை பார்க்கவும் வரலாம்.

ஆண்களில் தொப்பிகளை கவனியுங்கள். சாதாரண தினம் ஒன்றில் லண்டன் நகரில் இப்படி தொப்பிகளை காண்பது இப்போதெல்லாம் அரிது.
நீண்ட காலமாக வருடாவருடம் நடைபெறும் நிகழ்வு என்பதால், டான்ஸ் ஆடும் ஆட்கள் பாரம்பரிய டிரெஸ்ஸில் காணப்படுவார்கள். பிரிட்டனில் தற்போதெல்லாம் அதிகம் காணமுடியாத டாப் ஹாட்ஸ் தொப்பிகளை அணியும் ஆண்களை இந்த டான்ஸின்போது காணலாம். பெண்கள் விக்டோரியன் ஸ்டைல் ஆடைகளை அணிவார்கள்.

பழைய பாஷன் டிரெஸ்ஸாக உள்ளதே என்று நினைக்கிறீர்களா? இவை விக்டோரியன் ஸ்டைல் டிரெஸ்கள்.
ஃபுளோரா தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? குளிர்காலத்துக்கு (வின்டர்) விடைகொடுத்துவிட்டு, இலையுதிர் காலத்தை (ஸ்பிரிங்க்) வரவேற்பதற்காக மக்கள் அனைவரும் டான்ஸ் ஆடுவது என்பதுதான் இதன் அடிப்படை.
எல்லா வயதிலும் கலந்து கொள்வார்கள்.
பிரிட்டனின் கான்வால் பகுதியில் வழமையாக ஏப்ரல் மாத இறுதிவரை குளிர் இருக்கும். மே மாதத்தில்தான் குளிர் விலகி, வெப்பம் வரத் துவங்கும். அதனால், ஒவ்வொரு வருடமும் மே மாத் 8-ம் தேதி ஃபுளோரா தினம் கொண்டாடப்படுகிறது.

மாலையில் நடைபெறும் டான்ஸில்தான் வேகமான மியூசிக் அதிகம் இருக்கும்.
டான்ஸ் மியூசிக், லோக்கல் இசைக் குழுவால் வழங்கப்படுவதே வழக்கம். ஹெல்ஸ்டன் டவுன் இசைக் குழுவினர் வருடா வருடம் வாசிக்கும் டியூன்களுக்கே டான்ஸ் நடைபெறும். இங்குள்ள மற்றொரு விஷயம், இந்த மியூசிக், புதிய டியூன்கள் அல்ல. ஒவ்வொரு வருடமும் ஒரே இசைதான்.

ஆட்டத்திலும் கலந்து கொள்ளலாம். வேடிக்கை பார்க்கவும் சென்று வரலாம்.
ஹெல்ஸ்டன் டவுன் இசைக் குழுவினர், டான்ஸ் மியூசிக்கை ஞாபக சக்தியிலேயே இநைக்கிறார்கள். எந்த ஒரு காலத்திலும், இதற்காக மியூசிகட் நோட்ஸ் கிடையாது. 1890-ம் ஆண்டு கம்போஸ் செய்யப்பட்ட இசை இது.
ஒட்டுமொத்த நகரமே வீதிக்கு வந்துவிடும் தினம் இது!
இங்கு பாடப்படும் பிரபல பாடல் “John the Bone was walking home”, ஏற்கனவே பல பிரிட்டிஷ் திரைப் படங்களில் இடம்பெற்றது. உங்களில் சிலருக்கு இந்தப் பாடல் தெரிந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை: