புதன், 9 மே, 2012

640 கோடிக்கு ஏலம் போன கூக்குரல் ஓவியம்

நியூயார்க், மே 5- பிர பல ஓவியர் மறைந்த எட் வர்ட் முங்க் என்பவர் வரைந்த, தி ஸ்கிரீம்' என்ற ஓவியம் உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போனது. இந்த ஓவி யத்தை, 640 கோடிக்கு ஏலம் வாங்கியவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 
நார்வே நாட்டில், 1863ஆம் ஆண்டு பிறந்த எட்வர்ட் முங்க் சிறந்த ஓவியராக கருதப் பட்டார். அவர், முகபாவங்களை தத்ரூப மாக வெளிக்காட்டும் ஓவி யங்களை வரைவதில் வல்லவராக திகழ்ந்தார். நோய் மற்றும் உறவினர் மரணத்தால் வாழ்க்கை யில், அவர் மிகவும் சிரமப் பட்டார். தனது வாழ்நா ளில், இவர், 5,500க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் என் றாலும், அவர் வரைந்த, தி ஸ்கிரீம்' (கூக்குரல்) என்ற ஓவியம் தான் உலக புகழ்பெற்றது. இந்த ஓவியம் அமெ ரிக்காவில், சோத்பீ' என்ற ஏல நிறுவனம் நடத் திய ஏலத்தில், 11 கோடியே 99 லட்சத்து 22 ஆயி ரத்து 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப் பில், ரூ.640கோடி) விற் பனையானது. இதை ஏலத் தில் எடுத்தவர் யார் என்பது தெரிவிக்கப்பட வில்லை.
தன்னைச் சூழ்ந்துள்ள மிக பெரிய அலைகளில் இருந்து காப்பாற்றக் கோரி, ஒரு பெண், தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தி, வேதனையை வெளிப்படுத்தி, அபயக் கூக்குரல் எழுப்புவது போன்ற காட்சியை தான், இந்த, கான்வாஸ்' ஓவி யத்தில் அவர் சித்தரித்து உள்ளார்.
இதை, அவர் தனது 30ஆவது வயதில், 1893ஆம் ஆண்டு வரைந்துள்ளார். இவர், 1944ஆம் ஆண்டு காலமானார். இதுவரை உலகில் பாப்லோ பிகாசோ வரைந்த, தி நியூடு கிரீன் லீவ்ஸ் அண்டு பஸ்ட்' என்ற ஓவியம் தான் அதிகபட்சமாக, 568 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை விட, தற்போது எட்வர்ட் முங்க் வரைந்த ஓவியம் அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: