திங்கள், 7 மே, 2012

அமிர்கானின் ரியாலிட்டி ஷோ Super HIT

ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் 
‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.

மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் அமீர்கான். ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பாடலுக்காக தனது 5 மாத கைக்குழந்தையை அமீர் கான் நடிக்க வைத்திருந்தார். இதற்கு அவரது மனைவி கிரண்ராவ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காட்சியை நீக்கிய பின்பே ஒளிபரப்பினாராம் அமீர் கான். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவே தனது 5 மாத குழந்தையை நடிக்க வைத்தாக அமீர் கானின் நெருங்கி நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் இதேபோல் விறுவிறுப்பான விவாதங்கள் முன் வைக்கப்படுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: