புதன், 9 மே, 2012

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு

ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு 42 வது முறையாக ஒத்திவைப்பு

கடலூர்: பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு 42வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து திமுக எம்.பி. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடரலாம் என உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் ஜெயலலிதா மீது புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு, ஜூன் 9ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் விதிமீறல் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைககு வந்தபோது 42வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: