வெள்ளி, 11 மே, 2012

தேர்தல் நடத்தை விதியை தளர்த்தியது அ.தி.மு.க.,வுக்கு சாதகம்

 தமிழக தேர்தல் அதிகாரி அதிமுகாவின் கொபசே என்பது தெரிந்ததே 

சென்னை : புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியுள்ளது, ஆளும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக போய்விட்டது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறிஉள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:இடைத்தேர்தல்கள் நடைபெறும்போது, அத்தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். ஆனால், இப்போது தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டும், நடத்தை விதிகளை கடைப்பிடித்தால் போதும் என, தேர்தல் கமிஷனர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தாத போதே, அரசின் நலத்திட்ட உதவிகளை, சர்வ சாதாரணமாக ஆளும் கட்சியினர் வழங்கி வந்தனர். இப்போது, நடத்தை விதி தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியினருக்கு சொல்லவா வேண்டும்.


மேற்கு வங்க அரசு, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய, 2 லட்சம் கோடி ரூபாய் கடன் மற்றும் அதற்கான, 22 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி ஆகியவற்றை திருப்பி செலுத்த, மூன்று ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்று பிரதமருக்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து உள்ளார்.ஆனால், தமிழக அரசுக்குள்ள கடனுக்கு, முந்தைய தி.மு.க., அரசின் மீது முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்துவதோடு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு என, மக்கள் மீது வரியை சுமத்தி வருகிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: