வியாழன், 10 மே, 2012

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டம் தமிழக அரசு செயல்படுத்த முன்வரவேண்டும்

சட்டமன்றத்தில் சி.பி.எம். உறுப்பினர் கோரிக்கை
சென்னை, மே 9- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு மீண்டும் முயற் சிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. தங்க வேல் கேட்டுக்கொண் டார்.
தமிழகச் சட்ட மன்றத்தில் நேற்று (8.5.2012) இந்து சமய அறநிலையத் துறைக் கான மானியக் கோரிக்கைமீது நடை பெற்று விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே. தங்க வேல் பங்கேற்றுப் பேசு கையில்,
பெரியார் நூற் றாண்டையொட்டி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி மகாராஜன் குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட ஆகமங் கள் தடை விதிக்க வில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து திருச்சி கம்பரசம்பேட் டையில் அனைவருக்கு மான வேத - ஆகம பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமி ழகத்தில் 6 இடங்களில் தொடங்கி நடத்தப் பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் சுமார் 200 மாணவர்கள் பயின்றுள்ளனர். அவர் களுக்கு முக்கியத் தலங் களில் வேலை வழங்கு வதுடன், அர்ச்சகர் பயிற் சியை மீண்டும் தொடங்கி நடத்தவேண் டும்.

மடாதிபதிகளின் பாலியல் குற்றங்கள்

மடாதிபதிகள், பாலி யல் குற்றங்களைப் புரி வதும், வரி ஏய்ப்புச் செய் வதும், கொலை போன்ற குற்றங்களில் தொடர் புடையவர்களாக இருப் பதும் தொடர்கதை யாகியுள்ளன. மடங் களின் பெயரில் ஏராளம் சொத்துகள் இருக்கின் றன.

எனவே, மடங்களின் சொத்துகளை அரசே நிர் வகிக்க சட்டம் இயற்ற வேண்டும். மடங்களின் தலைவர்களை, ஜன நாயக வழியில் தேர்ந் தெடுக்க அரசு தலை யிடவேண்டும். (இந்த நேரத்தில் மடாதிபதிகள் குறித்த நீண்ட விவாதம் நடைபெற்றது. அமைச் சர்களுக்கும், மார்க் சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சவுந் தரராசன், கே. பால பாரதி, இந்திய கம்யூ னிஸ்ட் உறுப்பினர் குண சேகரன் ஆகியோருக் கிடையே நடைபெற்ற விவாதத்தில் தெரிவிக் கப்பட்ட கருத்துகள் நீதிமன்றத்தில் உள்ள மடாதிபதிகள் குறித்த வழக்கை பாதிக்கும் என்று கூறி அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, சி.வி. சண் முகம் ஆகியோர் கேட் டுக்கொண்டனர். இதை யடுத்து மடாதிபதிகள் குறித்த மொத்த விவாத மும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேர வைத் தலைவர் ஜெயக் குமார் அறிவித்தார்).

தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் 1950 ஆம் ஆண்டே இயற்றப் பட்டது. இச்சட்டத் தின்படி தனியார் கோவி லில்கூட, அதே மதத் தைச் சேர்ந்தவர் வழி படும் உரிமையை ஒருவர் மறுக்க முடியாது.

ஆனால், ஜாதிப் பாகுபாடுகளைக் கார ணம் காட்டி, பல கோவில்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை அனுமதிக்கப்படுவதில்லை. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

விழாக் காலங்களில் ஒரு குறிப்பிட்ட எல் லையுடன் நிறுத்தப்படு கின்றனர். இதற்கு செட் டிப்புலம், காளப்பட்டி, காங்கியனூர் என ஏரா ளமான உதாரணங் களைக் கூற முடியும். இந்து சமய அறநிலை யத் துறை இதுபோன்ற பாகுபாடுகளுக்கு எதி ராகவும், அனைவரின் வழிபாட்டு உரிமை யைப் பாதுகாக்கும் வகையிலும் நட வடிக்கை எடுக்கவேண் டும்.

உள்ளாட்சி மன் றங்களில் செய்வதைப் போல, கோவில் அர்ச் சகர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பதை கட்டாயமாக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் சட்ட மன்றத்தில் பேசினார்.

அமைச்சர் குறுக்கீடு

அப்போது குறுக் கிட்டுப் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்,

தமிழ்நாட்டில் அனைத்துக் கோவில் களிலும், அனைத்து ஜாதியினரும் நுழைந்து வழிபட உரிமை இருக் கிறது. எங்கும் மக் களுக்கு வழிபாடு மறுக் கப்படவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: