சனி, 12 மே, 2012

கலைஞர், ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ரகசிய உத்தர

கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ஒரு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.- ஜெயலலிதா அரசு

முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையெல்லாம் முடக்கி வைத்திருக்கும் தற்போதைய ஜெயலலிதா அரசு, கடந்த 5 வருடங்களில் தி.மு.க. அரசு நடத்திய நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர்களை பெயர்த்து எடுத்துவிடுமாறு ஒரு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனை, சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்ட பொதுப்பணித்துறையினர், கடந்த சில வாரங்களாக காவல்துறையின் உதவியுடன் சென்னையில் இப்பணியை நள்ளிரவு நேரங்களில் நடத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி முதல் போர் நினைவுச்சின்னம் வரை "பொலிவு பெறும் பூங்கா' அமைக்கும் பணியை மேற்கொண்டது சென்னை மாநகராட்சி. இதற்காக, தலைமைச் செயலகம் எதிரே பொலிவு பெறும் பூங்கா உருவாக்கப்பட்டது. பரந்து விரிந்த அந்த பூங்கா முழுவதும் பசுமைகள் போர்த்திக் கொண்டிருந்தன. அழகுரும் அப்பூங்காவை 2009, மே 25-ல் திறந்து வைத்தார் கலைஞர். இதனை நினைவு கூறும் வகையில், கல்வெட்டும் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கல்வெட்டில் இருந்த கலைஞர் பெயரையும் ஸ்டாலின் பெயரையும் உடைத்து எடுத்துவிட்டனர்.

அதேபோல, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்காக, தி.மு.க. ஆட்சியில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆட்சியின் போது கட்டப்பட்ட பாலங்களில், ஆலந்தூர் ஆப்ரகாம் மேம்பால மும் சைதை ஜோன்ஸ் சாலை பவளவண்ணன் சுரங்கப்பாலமும் மிக முக்கியமானது. இந்த பாலங் கள் திறக்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்ட கல்வெட்டுகளி லிருந்தும் கலைஞர், ஸ்டாலின் பெயர்களை மட்டுமல்லாது அந்த கல்வெட்டுகளையே தகர்த்தெறிந்து விட்டனர். மேலும், தமிழர்களின் வீரம், திறம், ஈகை, போர்க்குணம், பண்பாடு, கலைத்திறன், விருந்தோம் பல், வீர விளையாட்டுகளிலிருந்த ஈடுபாடு ஆகியவற்றை பறைச் சாற்றும் விதமாக சென்னை நகரம் முழுவதும் மாநக ராட்சி சார்பில் சிலை கள் நிறுவப்பட்டன.

இதனை, துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத் தார். அப்படி திறந்து வைக்கப்பட்ட ஸ்டெர் லிங் சாலை சந்திப்பி லிருக்கும் சிலைகளின் பீடத்தில் ஸ்டாலின் பெயருடனிருந்த கல் வெட்டும் பெயர்த்தெறி யப்பட்டுவிட்டது. இன்னும் விடுபட்டுள்ள கல்வெட்டுகளி லிருந்து பெயர்களை அகற்றும் பணியையும் செய்து முடிக்க துரிதமாக இருக்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.

இது பற்றி பொ.ப.து. வட்டாரங்களில் விசாரித்த போது,’’""ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் கடந்த பிப்ரவரியில் கொண்டாடப்பட்டது. இதற்காக, தமிழக அரசின் சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில்தான் நடந்தது. இதற்காக, பிரமாண்டமான கல்வெட்டு ஒன்று வைக்கப்படவிருக்கிறது. அதில், ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்படும். ஜெ.பெயரில் கல்வெட்டு அமையும் அதே பூங்காவில் கலைஞர், ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டும் இருப்பதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை போலும். அதனால் அவர்களின் பெயர்களை அகற்ற சொல்லிவிட்டனர். நாங்களும் செய்து விட்டோம். இனி, நாட்கள் செல்ல செல்ல... தி.மு.க.அரசால் நிறுவப்பட்ட அந்த கல்வெட்டு முழுமையாக ஒரு நாள் அகற்றப்பட்டு விடும்''’என்கின்றனர்.

ஜெயலலிதா அரசின் "பெயர் அகற்றும்' இந்த விவகாரத்தை ஆதாரப்பூர்வமாக கலைஞர் மற்றும் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன். அவரிடம் இதுபற்றி பேசிய போது,’’""ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடனே, தமிழ் மொழியின் அடையாளமாக கலைஞர் இருக்கும் நினைவு சின்னங்களையெல்லாம் அழிக்க உத்தரவிடப்பட்டது. அதன் முதல் கட்டமாக, செம் மொழிப் பூங்காவை இழுத்து மூடினார்கள். செம்மொழி என்பதையே அழித்தார்கள். ராணிமேரி கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு அரங்கத்திற்கு "கலைஞர் மாளிகை' என பெயரிடப்பட்டிருந்தது. ஆட்சியாளர் போய்வரும் பாதையில் அடிக்கடி அந்த கட்டிடமும் "கலைஞர் மாளிகை' என்ற பெயரும் கண்களில் பட்டதால், கலைஞர் என்பதில் இருந்த "ஞர்' என்ற எழுத்தை எடுக்கச்சொல்லி உத்தரவு போட... அந்த கல்லூரி நிர்வாகமும் அதை செய்து முடித்து விட்டது. இதே பாணியில்தான், மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டிருக்கும் கல்வெட்டு களிலிருந்து கலைஞர் பெயரையும் ஸ்டாலின் பெயரையும் அகற்றி வருகிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையை அழகு படுத்துவதற்கான ஆய்வினை கலைஞரும் ஸ்டாலினும் நடத்திய போது, உழைப்பாளர் சிலை அருகே 2001-2006 அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா அமைத்திருந்த நீரூற்று... மெரினா கடற்கரை யின் அழகான வியூவை மறைப்பதாகவும் அதனை அகற்றிவிடலாமென்றும் பொ.ப.துறை அதிகாரிகள் விவரித்த போது, "அந்த அம்மையாரின் பெயர் (ஜெ.) பொறிக்கப்பட்டிருக்கிறது. அதனை அகற்றுவது எப்படி நாகரீகமாக இருக்கும்? ஆட்சியாளர்களுக்கு தகுந்த மாதிரி யோசனை சொல்வதை நிறுத்துங்கள்' என்று அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார் கலைஞர்.

அதேபோல, பல்வேறு நாடுகளின் நதிகள் இரவு நேரங்களில் மின்விளக்குகளால் ஒளிரும் அழகைப் போல சென்னையிலும் கொண்டு வர நினைத்த ஸ்டாலின், முதல் முயற்சியாக நேப்பியர் பாலத்தினை வண்ணவிளக்குகளால் அலங்கரித்து அதிலிருந்து ஒளிரும் வண்ண ஒளிக்கதிர்களால் கூவத்தினை அழகுப்படுத்த விரும்பி அதற்காக கலைஞரும் ஸ்டாலினும் ஆய்வு நடத்திய போது, நேப்பியர் பாலம் அருகே ஜெயலலிதா அரசால் அமைக்கப்பட்டிருந்த கழுகு சிலை அவலட்சணமாக இருப்பதாகவும் அதனை அகற்றில்ற்டலாமெனவும் அதிகாரிகள் கூறினர். அதற்கு கலைஞர், "எந்த நோக்கத்திற் காக அந்த அம்மையார் இந்த கழுகு சிலையை வைத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியாது. அவரது நோக்கத்தை நாம் ஏன் சிதைக்க வேண்டும்?' என்று சொல்லி அதி காரிகளின் யோசனையை மறுத்தார்.

இப்படி பல சம்பவங்களை சொல்ல லாம். ஆனால், இத்தகைய சிந்தனை தற் போதைய ஜெயலலிதாவிற்கு இல்லை. அதனை அவரிடம் எதிர்பார்க்கவும் முடி யாது. உலக சரித்திரங்களைப் பார்க்கும் போது ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் வரலாற்றில் இடம்பெறக்கூடாது என்பதற்காக இந்தக் காரியங்களைச் செய்துள்ளார்கள். ஜெயலலிதாவும் அதையே செய்கிறார்'' என்கிறார் காட்டமாக மா.சுப்ரமணியன்.

-ஆர்.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: