திங்கள், 7 மே, 2012

Hillary Clinton கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்

கொல்கத்தா, மே - 7- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்தார். வங்காளதேச சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று  மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவுக்கு தனி விமானம் மூலம் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்த அவருக்கு  கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹிலாரி விமானம்  வந்து இறங்குவதற்கு முன்னும் பின்னும் 6 நிடங்கள் விமான நிலையத்தில் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்பட்டன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு  இருந்தன. ஹிலாரியுடன் அவரது  அமைச்சரவை  அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலுக்கு  அவர் சென்றார்.  அவரது காருக்கு முன்னும் பின்னும்  19 வாகனங்கள் அணி வகுத்து சென்றன. நேற்று கொல்கத்தாவில் சில முக்கிய நிகழ்ச்சிகளில்  ஹிலாரி பங்கேற்றார். இன்று அவர் மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜியை  சந்தித்து பேசுகிறார். கொல்கத்தா பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று பிற்பகல் டெல்லி புறப்பட்டு  செல்கிறார். ஹிலாரி கிளிண்டன் கொல்கத்தாவுக்கு வருவது இது  இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஒரு முறை அவர் கொல்கத்தா வந்திருக்கிறார்

கருத்துகள் இல்லை: