செவ்வாய், 8 மே, 2012

கேபிபி சாமி திமுகவிலிருந்து விலகத் திட்டம்?- கனிமொழி மூலம் சமாதானம்??

 Former Dmk Minister Kpp Samy Set Desert Party சென்னை: முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைதாகி பல நாட்களாகி, அவர் சிறையில் அடைபட்டுள்ள நிலையில் திடீரென அவர் மீது திமுக தரப்பில் பரிவு காட்டப்படுவது பலரையும் குழப்பியுள்ளது. ஆனால் அவர் திமுகவிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் மீது திமுக தலைமை திடீரென பரிவு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு மாயமானயினர். அவர்களை அப்போதைய திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் அடியாட்கள் மூலம் கடத்தி கொலை செய்ததாக இருவரின் மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் கைது செய்ய்பபட்டு நெடு நாட்களாகி விட்டது. இவர்களில் சாமியைத் தவிர மற்ற அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். சாமி மட்டுமே தொடர்ந்து சிறையில் அடைபட்டுள்ளார். சாமி குறித்து எந்தத் தகவலையும் திமுக வட்டாரத்தி்ல் காண முடியாத நிலையில் திடீரென 2 நாட்களுக்கு முன்பு திமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில்,

இன்றைய அதிமுக ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது, அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதுமுள்ள திமுக முன்னணியினரைப் பழி வாங்குவதையே முக்கிய பணியாக கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும், - போலீஸ் படையை கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் என கனவு கண்டு - அதனை நிறைவேற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் கே.பி.சங்கர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தும், கே.பி.சங்கரின் மனைவியை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, அவர் குடும்பத்தையே அழித்து விடும் முயற்சியில் இந்த அதிமுக அரசு ஈடுபட்டு, காவல்துறையை திட்டமிட்டு ஏவிவிட்டிருக்கிறது.

இந்நிலையில் இதுபோன்ற அதிமுக அரசின் போக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்திட திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் வழக்கறிஞர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

திமுக முன்னணியினர் பலர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் சாமி மீது திடீரென திமுக தலைமை காட்டிய பரிவு பலரையும் குழம்ப வைத்தது.

இந்த நிலையில் நேற்று திமுக எம்.பி கனிமொழி திடீரென புழல் சிறைக்குப் போய் அங்கு சாமியை சந்தித்துப் பேசினார். மேலும் சிறைவாசலில் சாமியின் தம்பி மனைவி ஸ்ரீதேவியையும் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தார்.

இதுவும் திமுக வட்டாரத்திலேயே குழப்ப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சாமி திமுக தலைமை மீது பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், தனது வழக்கில் திமுக தலைமை உரிய முறையில் உதவவில்லை என்று வருத்தமடைந்திருப்பதாகவும், திமுகவுக்கு முழுக்குப் போடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருவதாகவும் வந்த தகவல்களைத் தொடர்ந்தே திமுக தலைமை சுதாரித்துக் கொண்டு சாமி குறித்து பரிவு காட்ட ஆரம்பித்திருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்று நினைக்கும் வகையில் நேற்று கனிமொழியின் பேச்சும் இருந்தது.சாமியை சிறையில் பார்த்து விட்டுத் திரும்பிய கனிமொழி செய்தியாளர்களிடம் கூறஉகையில், சாமிக்கு துணையாக திமுக இருக்கிறது. அதனால், சாமி மன உறுதியுடனும், உடல் நலத்துடனும் இருக்கிறார். திமுகவை விட்டு விலகவும் அவர் நினைக்கவில்லை என்றார் கனிமொழி.

உண்மை என்னவோ...?

கருத்துகள் இல்லை: