வெள்ளி, 11 மே, 2012

கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுத்த mixed masala அதிர்ச்சி!

Viruvirupu
கனிமொழி டில்லி ஹைகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. “2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் எனக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்பதே கனிமொழி தாக்கல் செய்திருந்த வழக்கு.
இது பற்றி நாம் நேற்று வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியில், “சி.பி.ஐ. லாயருக்கு ஆர்டர் போயிருச்சா?” என்றும் தலைப்பு கொடுத்திருந்தோம். (லிங்க் கீழே உள்ளது, பாருங்கள்) நேற்றைய கோர்ட் விசாரணைக்கு சி.பி.ஐ. லாயர் ‘வெறும் கையுடன்’  வந்தே விட்டார்.
அதாவது கனிமொழியின் மனுவை நேற்று சி.பி.ஐ. மறுக்கவில்லை. கனிமொழிக்கும் கலைஞருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது சி.பி.ஐ.!

2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி மீது குற்றம் உள்ளது என்று வழக்கு தாக்கல் செய்தது சி.பி.ஐ.தான். தம்மிடம் ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றத்தை கன்வின்ஸ் செய்து கனிமொழியை கைதும் செய்தது. சிறையிலும் அடைத்தது. எனவே கனிமொழிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் சி.பி.ஐ.யிடம் உள்ளன.
ஆனால், கைது செய்தது தவறு என்று கனிமொழி தொடுத்த வழக்கில் அவற்றை காண்பிக்க சி.பி.ஐ. விரும்பவில்லை. சி.பி.ஐ. வக்கீல் வெறும் கையுடன் வந்து நின்றார். “நாம் இன்று எதிர் மனு தாக்கல் செய்யவில்லை” என்றார் கூலாக!
நேற்று (10-ம் தேதி) எதிர் மனு தாக்கல் செய்யவேண்டும் என சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. நீதிபதி நினைத்திருந்தால்,  இதையே காரணமாக வைத்து கனிமொழிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கலாம். 2ஜி வழக்கில் இருந்து கனிமொழியை விடுவிக்குமாறு உத்தரவிட்டிருக்கலாம்.
ஒருவேளை கனிமொழி தரப்பு எதிர்பார்த்ததும் அதுவாகத்தான் இருக்கலாம். தாம் எதிர் மனு தாக்கல் செய்யாவிட்டால், கனிமொழி 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சி.பி.ஐ-யும் நினைத்திருக்கலாம்.
ஆனால், நீதிபதி வேறு விதமாக முடிவு செய்து விட்டார்!
“குற்றம் சாட்டப்பட்ட கனிமொழியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சி.பி.ஐ. இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஒருவேளை அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது போலிருக்கிறது. எனவே, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 5, 6, 7-ம் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம்” என்று வழக்கை ஒத்தி வைத்துவிட்டார்.
சி.பி.ஐ. ஒத்துழைத்தும், கனிமொழிக்கு விதி ஒத்துழைக்கவில்லை.
சரி. செப்டம்பர் 5, 6, 7-ம் தேதிகளில் சி.பி.ஐ. எதிர் மனு தாக்கல் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா? அதற்குள் ஜனாதிபதி தேர்தல் முடிந்திடுமில்ல…!
அட… ஆமால்ல..  வெவகாரமான நீதிபதிதானுங்க!

கருத்துகள் இல்லை: