ஞாயிறு, 6 மே, 2012

கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் கோர்ட் அனுமதி

கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த
நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி

  உசிலம்பட்டி செட்டிச்சியம்மன் கோவில், பேரையூர் ஊத்தம்பட்டி செவிட்டு அய்யனார், காளியம்மன் கோவில், திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராம அழகர்சாமி கோவில், சின்னாளப்பட்டி சுந்தராஜர் பெருமாள் கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு முத்து மாரியம்மன் கோவில், மங்களநாடு மரகத விநாயகர் கோவில், கள்ளங்குடி முத்து மாரியம்மன் கோவில், வடகாடு முத்துமாரியம்மன் கோவில், நெல்லை மாவட்டம் நாங்குனேரி கீழபண்டாரபுரம் நாராயணசாமி கோவில், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆதிபராசக்தி கோவில், திருச்சி மாவட்டம் காட்டுப்பட்டி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நட்டானிகோவில் நீலகண்ட பிள்ளையார் கோவில்களிலும் சித்ரா பவுர்ணமி விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

மனுக்களை நீதிபதி ஹரி பரந்தாமன் விசாரித்தார். 12 கோவில்களிலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் இடம் பெறக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.

மாணவர்கள் உள்பட யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலும் பார்த்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் ஆடப்பட்டால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.