வியாழன், 10 மே, 2012

மதுரா பிருந்தாவன விதவைகள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்


புதுடில்லி, மே 10- பிருந்தா வனத்தில் தங்கியுள்ள விதவை களின் புள்ளி விவரத்தை சேக ரித்து அறிக்கை தாக்கல் செய்ய, 7 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, பிருந்தாவனில் குடும்பத்தால் கைவிடப்பட்ட விதவைகள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள னர். ஆதரவற்ற நிலையில் அவர்கள் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். மண்டபங்களில் தங்கும் இவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு சரியான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும்படி மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
ந்த வழக்கில் உதவி செய்ய, தேசிய சட்டச் சேவை ஆணையத்தை சேர்ந்த வழக்குரைஞர் இந்திரா ஷானி நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் அளித்த அறிக்கையில், பிருந்தாவனில் தங்கியுள்ள விதவைகளின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுப்பு நடத்தும்படி பரிந்துரை செய்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அமர்வு, விதவைகளின் எண்ணிக் கையை கணக்கெடுப்பதற்காக மதுரா மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து நேற்று உத்தர விட்டது.

பிருந்தாவனில் தங்கியுள்ள விதவைகளின் எண் ணிக்கை, அவர்களின் பெயர், வயது, முகவரி, எந்த ஊரை சேர்ந்தவர், பிருந்தாவனில் இருப்பதற்கான காரணம், அவர்களின் பெயரிலோ அல்லது இறந்த கணவரின் பெயரிலோ எங்காவது சொத்துகள் உள்ளதா? பிள்ளைகள் இருக்கிறார்களா போன்ற விவரங்களை திரட்டி, ஜூலை 25ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: