Kalai Selvi : · இந்தியா, , தமிழகத்தவர்களைப் பொருத்தவரை ஈழத் தமிழர்கள் என்றால் நமக்கு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் உள்ளடிக்கியே நாம் பார்க்கிறோம், அப்படியே புரிந்து உள்வாங்கியுள்ளோம். ஆனால் எதார்த்த மோ இலங்கையிலும், தமிழகத்திலும் வேறாக உள்ளது. அதுவும் இப்ப நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நன்றாகவே பாடம் நடத்தியுள்ளன. அது சமூக வலைத்தளங்கள் காலத்தில் நன்றாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
1. இப் பின்னணியில் சில கருத்து தமிழகத்தில் ஈழப்போராட்டம் பற்றிய பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.
2. இலங்கையின் யாழ்பாணம் -_வடக்கு மாகாண இயக்க தலைமைகளும், அவற்றின் பரப்புரைகளுமே முழு ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறாக தமிழகத்தில் கருதப்படுகிறது.
3. ஈழ போராட்டத்தில் ஏற்பட்ட ஏராளமான தவறுகளின் முக்கிய புள்ளியாக இந்த வடக்கு மாகாண யாழ்பாண மேலாதிக்க அரசியலே காரணமாக இருக்கிறது.
4. .. .போராளிகளில் மிக பெருவாரியானோர் கிழக்கு மாகாண போராளிகளே! எல்லா பக்கத்தாலும் பெரும் நெருக்கடிக்குள் உள்ளானவர்கள்கூட பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தவர்களே! இலங்கை இனப்பிரச்சனை பற்றி உண்மையான பல விடயங்களை இந்த வடக்கு போராட்ட தலைவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்
5. ஆனால் இயக்க தலைமைகளோ மற்றும் முக்கிய பொறுப்பாளர்களோ எல்லோரும் வடக்கு மாகாணத்தவர்களே! இது ஒரு மோசமான மாற்றாந்தாய் மனப்பான்மையாகும் .
6மேலும் போராட்டத்தில் மலையக போராளிகளின் பங்களிப்பு என்பது திட்டமிட்ட வகையில் முற்று முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.
7. கிடைத்த ஒவ்வொரு சந்தர்பங்களையும் விடுதலை போராட்டத்தையும் கடத்திய
வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல் மஃபியா கூலிப்படை பாசிச பிரபாகரன் என்ற
தனிமனிதன் உடைத்து நொறுக்கி கொண்டே வந்ததை தட்டி கேட்ட எல்லோருமே போட்டு
தள்ளப்பட்டனர்.
இது என்ன சுதந்திர போராட்டம்?
8. ஒரு தனி பாசிச மனிதனின் அகோர பசிக்கும் அவரை சூழ்ந்து நின்ற பல முட்டாள்களுக்கும் மொத்த இனத்தின் விடுதலை உணர்வும் காட்டி கொடுக்கப்பட்டது.
9. போராட்ட இயக்கத்தை தவறான பாதையில் இட்டு சென்ற ஏராளமான வடக்கு சுயநலமிகள் பெரும் பணக்காரர்களாகி விட்டனர்.
10. இவர்கள் மீண்டும் மீண்டும் ஈழம் ஈழப்போராட்டம் என்றெல்லாம் உரத்த குரல் எழுப்பும் போதெல்லாம் ஒரு பச்சை பொய்யையே ஓங்கி ஒலிக்கிறார்கள்.
11. இவர்களின் சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருப்பது வடக்கு மாகாண இயக்க அரசியல் வியாபாரிகளின் கூட்டு பஜனை கோரஸ்தான்.
12. இந்த வடக்கு இயக்க அரசியல் வியாபார் ஏஜெண்டுகள் தப்பி தவறியும் வீரமரணம் எய்திய கிழக்கு மாகாண போராளிகள் பற்றியோ மலையக போராளிகள் பற்றியோ பேசவே மாட்டார்கள்.
13. ஏனெனில் இவர்களுக்கு பணமும் வெளிநாட்டு சுற்றுலாக்களும் இதர வர்த்தக வாய்ப்புக்களும் வழங்குவது வடக்கு இயக்க பணமுதலைகள்தான்.
14. வடக்கு இயக்க கம்பனியானது ஜாதி மத நம்பிக்கை கொண்டது . எனவே அவரகள் ஒருபோதும் சக மனிதரை சக மனிதராக கருதவே மாட்டார்கள் .
15, கிழக்கின் மீதும் மலையகத்தின் மீதும் இந்த வட க்குகளின் இளக்காரம் கொஞ்ச நஞ்சமல்ல.
16. இதில் வேடிக்கை பிரதேசவாத வியாதியால் பீடித்துள்ள இவர்கள் வடக்கிலும் கூட பிரதேச ரீதியாக பாகுபாடு காட்டுவது என்பது ஒரு சர்வ சாதரண நிகழ்வுகள்தான்.
17. புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை கொன்று குவித்ததில் புலிகளின் வல்வெட்டி துறை மேலாதிக்கமே இருந்தது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.
18. புலிகளால் கொல்லபட்ட இதர தலைவர்களிலும் கூட ஒரு ஜாதியினர் மீது குறிப்பாக பிரபாகரனின் மீனவ சாதியைச் சேர்ந்தவர்களின் மீது வடக்கு புலிகள் கொஞ்சம் நீக்கு போக்கு காட்டிய சான்றுகள் எல்லாம்கூட உண்டு. .
19. இது பற்றி தற்போது பல காணொளிகள் உண்டு . குறிப்பாக லண்டனில் இருந்து திரு.ஜெயபாலன் திரு சோதிலிங்கம் ஆகியோர் வெளியிட்ட கானொளியில் மிக தெளிவாக இது பற்றி அறியலாம்.
20. இன்றைய நிலையில் மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை 41 ஆகும் . அதில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை வெறும் 8 மட்டுமே.
இந்த யாழ்ப்பாண மாவட்ட அரசியலைத்தான் தமிழகத்தில், ஈழ அரசியல் என்று கருதி கொண்டிருக்கிறார்கள் . மலையகத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றவர்களைப் பற்றி மூச்சு கூட விடாமல் , கிழக்கைப் பற்றி கண் டும் காணாமல் அதைப் பற்றி கூட கதைக்காமல் சும்மா இருக்கின்றார். .
ஏனெனில் இவர்கள்தான் பெரும்பாலும் இயக்கத்தின் பணத்தை உலகம் முழுவதும் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இப்போது புரிகிறதா தமிழக புலி பிரசாரகர்களின் உள்நோக்கம்?
தமிழகத்தின் பாசிச வடக்கு புலி ஆதரவாளர்கள்
வடக்கு பாசிச புலிகளின் கூலி பட்டாளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக