உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிலத்தை 1 கோடி ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். திடிரென்று அந்த நிலத்தின் அருகே உயிருக்கு ஆபத்தான ஒரு தொழில்சாலை வருகிறது. அங்கே யாரும் நிலம் வாங்க தயாராக இல்லை. இப்போது நீங்கள் அந்த நிலத்தை 50 லட்சத்திற்கு விற்க முடிவு செய்கிறீர்கள். மீதி 50 லட்சம் எங்கே போனது? மதிப்பு குறைந்து போனது அவ்வளவே.
இதே தான் கரன்சியிலும் நடக்கும். ரஸ்யா, இந்தோனேசியா, வியட்நாம், ஈரான், ஈராக் இங்கெல்லாம் பணமதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விழவில்லை. சமூக, அரசியல் பொருளாதார காரணங்களால் சட்டென்று விழுந்தது.
பொருளாதாரம் வீழும் போதெல்லாம் தங்கள் நாட்டின் பணமதிப்பு விழுந்துவிடக் கூடாது என்று
தங்கத்தை பெரிய நாடுகள் சேர்த்துவைப்பது அதனால் தான்.
தங்கம் இப்போதைக்கு குறையப்போவதில்லை. பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீண்டு வந்து சரியாகும் வரை இது தான் நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக