கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பெரையில்... இவர் கல்யாணம் ஆனவர்.. ஆனால் அவருடன் சண்டை போட்டுக் கொண்டு 2016-ல் பிரிந்துவிட்டார்... முறைப்படி விவாகரத்தும் பெற்று கொண்டார்.
பிறகு 2வது கல்யாணம் செய்தார்.. அவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்.. 3 மாசம்தான் வாழ்ந்திருப்பார்.. அவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு போய்விட்டார்.போனவர் சும்மா போகவில்லை.. 30 லட்சம் ரூபாய், 40 சவரன் நகைகள், காருடன் அகிலா எஸ்.ஆனார்.. எங்கே போனார் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில், கொஞ்ச நாளைக்கு முன்பு அகிலா சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.. சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. ரூமுக்குள் பிணமாக அகிலா கிடப்பதை பார்த்ததும் அந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான், அகிலா அடிப்படையிலேயே ஒரு பணக்கார வீட்டு பெண் என்பது தெரியவந்தது.. இவர் அப்பா ஒரு கோடீஸ்வரராம்.. அதனால்தான் பணம், நகைகளிலேயே அகிலா புரண்டுள்ளார்.
இந்த 4 வருஷமாக மாயமான அகிலா, காசர்கோடு, கோழிக்கோடு, ஆலப்புழா இப்படி ஒவ்வொரு இடங்களுக்கும் அகிலா சென்றுள்ளார்.. கையில் அவ்வளவு காசு, நகையுடன் ஏன் இங்கெல்லாம் சென்றார்? யாருடன் சென்றார்? எப்படி சென்றார் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக