அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தவர் தான் ஜோ பைடன்.
இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்காக ஜோ பைடன் பல்வேறு சலுகைகளை அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்காக ஹெச்-1பி விசா உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் பேசுகையில் , இந்தியாவுடனான வரலாற்று சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைமை தாங்கினேன். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் மாறினால், உலகம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நான் கூறியிருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக