சனி, 22 ஆகஸ்ட், 2020

மீண்டும் மத்திய அமைச்சு செயலர் ராஜேஷ் கோட்சே இந்தி வெறி அடாவடி பேச்சு ..

.indianexpress.com : இந்தி தெரியவில்லை எனில் வெளியேறுங்கள்; ஆயுஷ் செயலாளருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தமிழக மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசில் பணிபுரியும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசில் பணிபுரிந்து வரும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டபோது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுஷ் செயலாளர் கோட்சே தமிழக மருத்துவர்களை இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “யோகா மற்று இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில், இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது. ஆங்கிலத்தில் பயிற்சி கொடுங்கள் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்து அவர்களின் பெயர்களையும் கேட்டு அச்சுறுத்தியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கனிமொழியிடம் பேசிய அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் – ராஜேஷ் கோட்சே இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார்.

அதிகாரிகளப் பேச அனுமதித்து மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது – ‘அதிகாரிகளை வைத்து இந்தியை திணிப்பதுதான் எங்களின் திட்டம்’ என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்துவிடாமல் உறுதி செய்திட வேண்டும்.

தமிழகத்திலிருந்து பங்கேற்போரை அவமதிக்கும் தரக்குறைவான போக்கு கைவிடப்படவேண்டும் என்றும் – அது போன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுஷ் செயலாளர் தமிழக மருத்துவர்களை இந்தி தெரியாவில்லை எனில் வெளியேறுங்கள் என்று கூறியது தொடர்பாக மத்திய அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளர்.

கனிமொழி எம்.பி மத்திய மாநிலங்கள் அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாய்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்திய ஆன்லைன் பயிற்சி நிகழ்வில் இந்தி திணிப்பது பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் இந்தி பேசாத பங்கேற்பாளர்கள் வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.

அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 22 மொழிகளும் அலுவலக மொழிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியும் ஆங்கிலமும் அலுவலக மொழி என்பது நீங்கள் அறிவீர்கள். மக்களவையில் வாக்கெடுப்பின்போது, இந்தி பேசாத மாநிலங்கள் ஆங்கிலம் துணை மொழியாக இருக்க வேண்டும் என்று கோரியபோது 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆங்கிலம் காலவரையறையின்றி தொடரும் என்று அளித்த வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதனால், நான் இந்த நிகழ்ச்சி பற்றி உடனடியாக விசாரணை நடத்தவும் மொழிகளின் அடிப்படையில், நம்முடைய குடிமக்களி அவமதித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். மேலும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்றும் இந்தி பயன்படுத்தப்பட்டால், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளா

கருத்துகள் இல்லை: