செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

சொதப்பும் ஐ-பேக்... கொதிக்கும் திமுக... இதுவரை பிரசாந்த் கிஷோர் டீம் செய்தது என்ன..?

 Arsath Kan-tamil.oneindia.com : சென்னை: திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன செயல்பாடுகள் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய டீமில் பாதிபேர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதால், அனுபவமற்ற புதிய நபர்களை கொண்டு திணறி வருகிறார் பி.கே. சமூக வலைதளங்களில் திமுக மீதான விமர்சனங்களுக்கு ஐ-பேக் குழுவில் இருந்து சரியான பதிலடி கொடுப்பதில்லை என்பது கட்சி சீனியர்களின் கருத்தாக உள்ளது.        கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்.. டிக்டாக்கை அடுத்து அலிபாபாவிற்கும் அதிரடி செக்! தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் தேர்தல் வியூகம் வகுப்பதில் ஸ்பெலிஸ்ட் என பெயரெடுத்த பிரசாந்த் கிஷோரை அறியாத தலைவர்களே இந்தியாவில் இருக்கமுடியாது.           தங்கள் கட்சியின் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் கொண்டு வர இவரிடம் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையிலேயே பயணப்பட விரும்புபவர். தமிழகத்தில் இருந்து கூட மக்கள் நீதி மய்யம், அதிமுக சார்பில் கடந்தாண்டு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


ஆனால் அவரோ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூலம் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றும் ஒப்பந்தத்தை பெற்றார். இதையடுத்து சென்னை அண்ணாநகரில் ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்த பிரசாந்த் கிஷோர், முதற்கட்டமாக திமுகவின் டேட்டா பேஸ் கலெக்ட் செய்யும் பணியை தொடங்கினார். இது திமுக தகவல்தொழில் நுட்ப அணிக்கும் ஐ-பேக் அலுவலகத்திற்கும் உரசலை உண்டாக்கியது. தனது பணியாளர்களை வைத்து தகவல்களை திரட்டாமல் நோகாமல் நுங்கு திங்க பார்க்கிறார் பிரசாந்த் கிஷோர் என அவர் மீது திமுக ஐ.டி.விங் குற்றஞ்சாட்டியது. ஊரடங்கு அமல் இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அண்ணா நகரில் திறக்கப்பட்ட ஐ-பேக் அலுவலகம் முடங்கியது. இருப்பினும் ஒன்றிணைவோம் வா, சாலையோரம் வசிப்போருக்கு உணவு கொடுக்கும் திட்டம் என சில பணிகளை முன்னெடுத்தது ஐ-பேக் நிறுவனம். கொரோனா தீவிரமாக பரவிய காலம் என்பதால் இது திமுக நிர்வாகிகளை குறிப்பாக அவர்களது குடும்பத்தினரை அச்சமூட்டியது. இதையடுத்து ஜூம் கால் மீட்டிங் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை கவனிக்கத் தொடங்கினர் ஐ-பேக் ஊழியர்கள். முன்னணி நிர்வாகிகளாக இருந்தால் மட்டுமே செய்தியாளர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அந்த முயற்சியும் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. களப்பணிகள் ஆயிரம் இருக்க பிரஸ்மீட் ஏற்பாடு செய்வதை ஏதோ பெரிய சாதனையாக கருதி வருகின்றனர் ஐ-பேக் ஊழியர்கள். திமுக எதிர்பார்த்த வேகமும், விவேகமும் ஐ-பேக் குழுவில் இல்லாததால் சற்றே அதிருப்தியில் உள்ளார் மு.க.ஸ்டாலின். இதனிடையே பிரசாந்த் கிஷோர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்த திமுகவுக்கு, அவர் தனது சொந்த மாநிலமான பீகார் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: