Jagadheesan LR : தமிழ்நாட்டின் “போராளிகள்”, “கட்சி அரசியல் தாண்டிய” (?!)
அரசியல் செயற்பாட்டாளர்கள்; ஈழத்தமிழர் ஆதரவாளர்கள்; சுற்றுச்சூழல், மனித உரிமை, தலித்திய மேம்பாடு, பெண்ணீயம், etc, etc, etc labelகளில் உலா வரும் எல்லாவித திடீர்/குபீர் போராளிகளின் ஒட்டுமொத்த லட்சணத்துக்கும் இந்த பதிவு ஒரு சோற்றுப்பதம்.பதிவின் துவக்கத்தில் இவர் குறிப்பிடும் அந்த 15 பேரின் உயிர் எந்த கட்சியின் ஆட்சியில் எந்த முதல்வரின் நேரடி உத்தரவில் செயற்படும் காவல்துறையால் பறிக்கப்பட்டன என்று பதிவின் எந்த இடத்திலும் ஒரே ஒரு வார்த்தை கூட இல்லை. அவ்வளவு தெளிவு. ஆனால் இந்தியாவுக்கு வெளியே அந்நிய நாட்டில் கொலைகளையே கொள்கைகளாக முன்னெடுத்த ஒரு மூர்க்க கும்பலின் ஆயுத அழிவரசியல் அயோக்கியத்தனத்தால் நேர்ந்த கொடூரமான கோர முடிவுக்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வரான கலைஞரே நேரடி, முழுபொறுப்பு என்று கூவின வாய்கள் இதே வாய்கள் தான். இன்றுவரை கூவிக்கொண்டிருக்கும் வாய்களும் இதே மேல்வாய்கள் தான்.
25 ஆண்டுகளாக இந்த ஈனத்தனத்தை, இரட்டை அளவுகோள்களை பார்த்துப்பார்த்து அலுத்துவிட்டது. ஆட்கள் மாறினார்களே தவிர இவர்களின் அழிவு வேலைத்திட்டம் மட்டும் மாறவே இல்லை. அப்பட்டமான திராவிட வெறுப்பு; முற்று முழுதான கலைஞர் மீதான காழ்ப்பு. இந்த இரண்டும் தான் இவர்களை வழிநடத்தும் இரண்டே இரண்டு அரசியல் கொளுகைகள்.
இதற்காக இதுகள் முதலில் எம்ஜிஆரை ஆதரித்தனர். பின்னர் அவருக்காக உடன்கட்டை ஏற நினைத்த எம்ஜிஆரின் அம்முவை ஆதரித்தன. அவருக்கடுத்து விஜயகாந்த் என்கிற ஆனப்பெரிய அரசியல் ஒப்பந்தத குத்தகைதாரரை ஆதரித்தன.
இடையில் மூப்பனார் முதல் ராமதாஸ் வரை இவர்கள் ஆதரித்து களமாடிய “முதல்வர் மற்றும் முதல்வர் வேட்பாளர்கள்” எண்ணிக்கை தனி. இப்போது கமலும் ரஜினியும் கொடுக்கவேண்டியதை கொடுத்து அழைக்கவேண்டிய முறையில் அழைத்தால் அதுகளுக்கும் இதுகள் சாமரம் வீச தயார். தரகர் தமிழருவி மணியன் தான் மனது வைக்கவேண்டும். அல்லது சிறை மீண்டு (?!) சின்னம்மா படியளந்தால் திராவிட செல்வனின் திருநாம ஜெபம் செய்யவும் இதுகள் தயார்.
திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க காசு செலவு பண்ண யார் முன்வந்தாலும் இவர்களுக்கு கொண்டாட்டம் தான். வரக்கூடிய தேர்தலில் வழக்கத்தை விட கூடுதலாகவே பணம் கொட்ட ஆளும் பாஜக தயாராக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் ஐந்தாம் படைகளுக்கு இனி திருவிழாக்காலன் தான்.
இதில் பலருக்கு ஈழத்தமிழரின் வெளிநாட்டு வெள்ளிக்காசும் ஜெயலலிதாவின் உடனுறை தோழி சசிகலாவின் கணவர் நடராஜனின் நல்கைகளும் தான் கட்சி நடத்தவும் குடும்பம் நடத்தவுமான நிதி மூலமே. இப்படிப்பட்ட போராளிகள் தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.
ஒருபக்கம் ஜாதிச்சங்கங்கள். மறுபக்கம் மதவெறிகும்பல்கள். இடையில் இதுபோன்ற போலிப்போராளிகள். இதுகளுக்கு மத்தியில் தான் தமிழ்நாட்டு அரசியல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக