மின்னம்பலம் : முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான ரகுமான் கான் இன்று (ஆகஸ்டு 20) உடல் நலக் குறைவோடு கொரோனா தொற்றும் ஏற்பட்ட நிலையில், சென்னையில் காலமானார். திமுகவில் உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரான ரகுமான்கான் ராமநாதபுரம், சேப்பாக்கம், பூங்கா நகர் தொகுதிகளில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,. சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்டு எம்.ஜி.ஆரை திணற வைத்தவர்.
உயர் நீதிமன்றத்தில் பதினைந்து ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றியவர். 96 ஆம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியங்களைக் கொண்டு வந்தவர் ரகுமான்கான்.ச ிறந்த பேச்சாளரான ரகுமான்கான் திமுகவுக்காக ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறார். மாநாடுகளில் ரகுமான்கானின் உரைக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சட்டமன்றத்திலும் மிகச் சிறந்த பேச்சாளர். சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் அந்த காலங்களில் இடி மின்னல் மழை என்று மூன்று பேர் வர்ணிக்கப்பட்டனர். துரைமுருகன், ரகுமான் கான், க.சுப்பு ஆகியோரைக் குறிப்பிட்டுதான் இடி மின்னல் மழை என்று கூறுவார்கள். ரகுமான்கான் மறைவுக்கு திமுக மற்றும் பிற கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக