இந்நிலையில், தமிழக பாஜாகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய எல்.முருகன், ” அடுத்த 6 மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சியே, தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும்” என மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அடுத்த சட்டபேரவைக் கூட்டத்தில், கணிசமான பாஜக- வினர் சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்று கூறிய முருகன், “பாஜக வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு வழங்கப்படும்” என்று ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், ” ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று தெளிவுபடுத்தினர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கூட்டணியில் இருந்து தமிழகத்தில் 5 இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில், ஒன்று அக்கட்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக