ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

BBC : தேர்தலுக்கு முன்னர் சீன தூதரக அதிகாரிகள், இலங்கையின் அரசியல் தலைவர்களுடன்....

ஸ்ரீலங்கா பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு குடும்ப அதிகாரத்தை பலப்படுத்திய பின்னர் புதுடெல்லியின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.     இந்த தகவலை இந்திய செய்தித்தாளான எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜபக்சர்கள் பாரம்பரியமாக சீனர்களுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், பிரதமரின இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டபயா, 2019 ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதுவரை நடவடிக்கையும் எடுப்பதைத் தவிர்த்துவிட்டார்.

இருப்பினும், அனைத்து கண்களும் இப்போது மூத்த ராஜபக்ஷவின் மீது உள்ளதாக எக்கானமிக் டைம்ஸ் கூறியுள்ளது. ஏற்கனவே அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெய்ஜிங்குடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டார் என்பதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை இந்தியா கவனித்து வருவதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.

சீனா இந்தியப் பெருங்கடலுக்கு தனது ஒரு நங்கூரமாக இலங்கையை உருவாக்க விரும்புகிறது,

ஹம்பாந்தோட்டை துறைமுகம் முதல் இலங்கை கடலில் உள்ள சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை இந்தியாவுக்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் “இலங்கை சீனாவுடனான உறவுகளை நீர்த்துப்போகச் செய்யும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை,

எனினும் புதுடெல்லியின் பாதுகாப்பு நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக மிகப்பெரிய தேர்தல் ஆணையை அடிப்படையாகக் கொண்ட எந்த நடவடிக்கையும் மஹிந்தவின் அரசாங்கம் இன்னும் தொடங்கவில்லை. என்பதை பார்க்கமுடிகிறது என்று எக்கோனோமிக் டைம்ஸ் கூறுகிறது.

இலங்கையின் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தி செய்தியை அனுப்பிவிட்டார் அத்துடன் இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர்; கோபால் பாக்லே, எதிர்கால ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை சந்தித்த முதல் வெளியுறவு இராஜதந்திரியாக இடம்பெற்றிருந்தார்.

கடந்த வாரம் கோவாவில் உள்ள இந்திய கடற்படைத் தளம் இலங்கை விமானப்படை விமானத்தை பழுதுபார்த்தது, இது கொழும்பில் பெரும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது என்றும் எக்கனோமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சீன தூதரக அதிகாரிகள், இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் மூடிய கதவு, திரைக்குப் பின்னால் கூட்டங்களை நடத்தியதாக இந்திய செய்தித்தாள் கூறுகிறது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையிலும், பின்னர் 2018 ஆம் ஆண்டில் மாலைதீவிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோது பெய்ஜிங் ஆச்சரியத்தில் மூழ்கியது.

இதனையடுத்து இலங்கையில் சக்திவாய்ந்த புத்த மதகுருக்களுக்கு ஊக்கமளிக்க சீனா முடிவு செய்தது என்றும் இந்திய எக்கனோமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

bbc

கருத்துகள் இல்லை: