BBC : இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை 2.30
மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், வீடு திரும்பினார். எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இரு வாரம் வீட்டுத்தனிமையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.இந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலையை எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், அமித் ஷாவின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு தலைவரும் மருத்துவருமான ஆர்த்தி விஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட்-19 வைரஸ் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்த நிலையில், உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறி வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக