வெப்துனி எ: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பலரின் தற்கொலைக்கு காரணமாக வேண்டாம் என மோடிக்கு கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எனக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான வசதிகள் தற்போது மாணவர்களுக்கு இல்லை. தேர்வு அறிவித்ததிலிருந்து இளைஞர்களிடையே அதிக அளவில் விரக்தி ஏற்பட்டுள்ளது. எனவே தேர்வுகளை நடத்தினால், இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்வதற்கு நீங்கள் காரணமாகிவிடுவீர்கள். எனவே, இந்த தேர்வுகளை தீபாவளிக்குப் பிறகு நடத்தவேண்டுமென்று மத்திய கல்வித்துறைக்கு நீங்கள் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக