செவ்வாய், 4 ஜூலை, 2017

BJP இல கணேசன், ஹெச் ராஜா, பொன் ராதா, நிர்மலா சீதாராமன், தமிழிசை உளறுவது..

ravichandaran.rathinavelu: இல கணேசன், ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், தமிழிசை இவர்கள் தினம் ஒன்று உளறுவதும் பின்பு வாங்கிக் கட்டிக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது...
பதவிக்காகவவும் பணத்துக்காகவும் கோமாளி தலைமையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்வது இவர்களின் வேலையாகி விட்டது...
இவர்கள் ஒன்றும் மனதுக்கு பிடித்து அந்த கமெண்ட்களை வீசுவதாக தெரியவில்லை..(ராஜாவைத்தவிர).< குழப்பமான மற்றும் அவசரபுத்தி கொண்ட தலைமையின் கருத்துகளின் மொழி பெயர்ப்பாளர்கள்தான் இவர்கள்..
பதவிக்காக, அழுது நடித்த அதிமுக அமைச்சர்களைப்போன்ற சராசரி மனிதர்கள்தான்...
நான் இவர்களுக்கு குடை பிடிக்கவில்லை. அதே சமயம் அவர்கள் நீங்க திட்டுற அளவு ஒர்த் இல்லாத மனிதர்கள்..
ஒரு சேம்பிளுக்கு நிர்மலா சீதாராமன் கூறியதை எடுப்போம்.."வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை".. ஆக இவருக்கு தெரிந்திருக்கிறது... தங்கள் தலைமை வீட்டில் சாப்பிடுவதைதவிர அனைத்து விஷயங்களிலும் இந்திய மனிதர்களின் வாழ்க்கையை இறுக்கி இருக்கிறது என்று. . அங்கு எதிர்வினைகாட்டினால் ஓசியில அமைச்சர் பதவி கிடைக்குமா??
அதான் இங்க வந்து சொல்லுது...
இல கணேசன் மீத்தேன் பிரச்சனையில் "தேசத்திற்காக ஒரு மாநிலத்தை விட்டுகொடுக்கலாம்" என்று கூறியதிலும் தங்களது தலைமையின் சாடிஸ்ட் குணமான உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த தே. பக்தாள்னு சீன்போட்டுட்டு நிஜத்துலும் இணையத்திலும் கம்புசுத்தும் சாதாரண மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
செல்லக்காசு முதல் இன்று கதிராம்பட்டின மீத்தேன் வரை பிஜேபி தலைமையின் திமிர்தனத்துக்கு காரணம் இவர்களின் சப்போர்ட் என்ற ஆயுதம் கையில் இருப்பது தான்.
மேலே சொன்ன அந்த ஐந்து மனிதர்களின் நிலையானது....
உத்தம புத்திரன் படத்து " எமோஷனல் ஏகாம்பரம் " கரெக்டர்தான்.. இவர்கள் நடித்துகொண்டு இருக்கிறார்கள்.
முட்டாபீசும் முரட்டு பீசும் கொடுக்கும் ஆர்டர்களை பல நேரம் நிறைவேற்றினாலும் அங்கு இவர்களுக்கு அடிக்கடி கிடைப்பது அர்ச்சனையே...

கருத்துகள் இல்லை: