அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக லாரிகள் மூலம் கற்களை கொண்டுவந்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு குவித்துவருகிறது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான பல்வேறு இந்து அமைப்புகளின் கரசேவர்களால் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்.
பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சனையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காகக் கடந்த ஜூன் 19ம் தேதி இரண்டு டிரக்குகளில் கற்கள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியில் குவிக்கப்பட்டது. தற்போது மேலும் மூன்று டிரக்குகளில் கற்கள் கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகளில் கற்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து அயோத்தி ராம்சேவக்புரத்திற்கு படிகப்பாறைக் கற்கள் வந்திறங்கியுள்ளன. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான ராம ஜென்மபூமி நியாஸ், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு இருந்த அகிலேஷ் யாதவ் அரசு, கற்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் விதமாகப் படிவம் 39ஐ விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்குத் தராமல் இழுத்தடித்தது.
தற்போது,அங்கு பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுவதால் கற்களை அயோத்தியில் குவிப்பதில் அவர்களுக்குத் தடை ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஃபைசாபாத் வட்டார ஆணையர் மனோஜ் மிஸ்ரா கூறுகையில், தற்போதைய அரசு அயோத்தியில் கற்கள் இறக்குவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அதேபோல், அயோத்திக்குக் கற்கள் கொண்டுவருவது என்பது எந்த நீதிமன்றத்தாலும் ஆணையத்தாலும் தடை செய்யப்படவில்லை. மேலும், தனியாருக்குச் சொந்தமான இடத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கற்களை சேமித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக