சனி, 8 ஜூலை, 2017

அதிபர் ட்ரம்ப் போலந்து அதிபரின் மனைவியிடம்...

Gajalakshmi வார்சா : மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது போலந்து இதனால் கையை நீட்டி காத்திருந்த ட்ரம்ப் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சரியான பதிலடி அகடாவின் இந்த செயலை சரியான மட்டையடி என்று டுவிட்டரில் பலரும் பகிர்ந்ததால் இந்த வீடியோ வைரலானது.
அதிபரின் மனைவி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சட்டை செய்யாதது போல் மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்ணுமான மெலனியா ட்ரம்ப்புடன் போலந்து தலைநகர் வார்சா சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்களுக்காக அதிகாரப்பூர்வ புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிபர் ட்ரம்ப் போலந்து அதிபர் டூடாவுடன் முதலில் கை குலுக்கியுள்ளார். இதனையடுத்து போலந்து முதல் பெண்ணும் போலந்து அதிபரின் மனைவியுமான அகடா கொர்ஹாசர் டூடாவிற்கு கை குலுக்குவதற்காக தனது வலது கையை நீட்டியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அகடா நேராக மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கியுள்ளார்.


இதனையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலந்து அதிபர் டூடா அகடா மெலனியாவுடன் கைகுலுக்கி விட்டு, ட்ரம்ப்புடன் கை குலுக்கியதாகவும், ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். தவறான புரிதல் முதலில் ட்ரம்ப் கை நீட்டியதை கவனிக்காமல் போனாலும் அகடா மீண்டும் வந்து ட்ரம்ப்புடன் கை குலுக்கியுள்ளார். பலர் அகடாவின் செயலுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதோடு கவனக்குறைவாலேயே அகடா ட்ரம்ப் கை நீட்டியதை கவனிக்காமல் சென்று விட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

 ட்ரம்ப்பிற்கே அல்வாவா? வழக்கமாக தன்னை சந்திக்க வரும் தலைவர்களைச் சீண்டுவதை அதிபர் ட்ரம்ப் தான் வழக்கமாக வைத்திருந்தார். போப்புடன் புகைப்படம் எடுத்த போது அவரது கையைச் சுரண்டியது, மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தது என்று அட்டகாசம் செய்து வந்தார். ஆனால் அவரையே செமயாக கலாய்த்துள்ளார் போலந்து அதிபரின் மனைவி என்பது தான் நெட்டிசன்களின் கொண்டாட்டத்திற்கு காரணம். tamiloneindia

கருத்துகள் இல்லை: