மின்னம்பலம் : திமுக
செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சென்னை
நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கண் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, சட்டமன்றக் கூட்டத்தொடர், ஏரி தூர்வாருதல் என்று பரபரப்பாக இயங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த ஸ்டாலின் இன்று ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களாக ஸ்டாலினுக்கு கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கண்ணின் புரை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை என்றும், மேலும் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்திலிலுள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக