வெள்ளி, 7 ஜூலை, 2017

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் !

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் !மின்னம்பலம் :மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வெளியேற்ற உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் இன்று ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான மென்பொருள்களை உருவாக்கி வழங்கி வருகிறது. உலகில் 162 நாடுகளில் கிளைபரப்பியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவிலும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, பூனே ஆகிய 9 நகரங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உள்ளது. இதில் டெல்லி குர்கானில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மென்பொருள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமையகமாக செயல்படுகிறது.
ஐதராபாத்திலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சேவை வழங்குதல் தொடர்பாக செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 1.21 லட்சம். அதில், இந்தியாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 6000 ஊழியர்கள் என்று அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், மைக்ரோசாஃப் நிறுவனம், தனது கிளவுட் சர்வீஸ் சேவையில் கவனம் செலுத்துவதற்காக ஆட்குறைப்பு மூலம் ஆயிரக் கணக்கான பணியாளார்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும்பாலும், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில்தான் நடக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: