விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் மூன்று
அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் சென்னை வந்து அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களை சந்தித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்திருந்தாலும் பாஜக தரப்பு ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியிடம் மட்டும் தான் ஆதரவு கேட்டது. தினகரன் தரப்பை புறக்கணித்தது. இதனையடுத்து எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு தங்கள் ஆதரவை வரிசையாக அறிவிக்க, தினகரன் தரப்பு தானாக முன்வந்து தங்கள் ஆதரவை பாஜகவுக்கு வாலண்டியராக தெரிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முதலில் ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து பின்னர் எடப்பாடி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்தார். ஆனால் தினகரனை சந்திக்கவில்லை.
ஆனாலும் எடப்பாடி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிகள் ராம்நாத் கோவிந்திடம் சென்று எங்கள் தலைவர் தினகரன் உங்களை சந்திக்க தயாராக உள்ளார். நீங்களாக முன்வந்து அவரை சந்தித்தாலும் சரி அல்லது நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் உங்களை அவர் வந்து சந்திக்க அனுமதித்தாலும் சரி என பேசியுள்ளனர். ஆனால் ராம்நாத் கோவிந்த் என்னுடைய பயணத்திட்டத்தில் அப்படியொரு நிகழ்ச்சியே இல்லை, அதனை மாற்ற முடியாது என கூறி தினகரனை சந்திக்க மறுத்துள்ளார்.
ஆதரவு கேட்காமலே தானாக வாலண்டியராக போய் ஆதரவு தெரிவித்தும், வாலண்டியராக போய் சந்திக்க அனுமதி கேட்டும் கிடைக்காமல் தினகரனை பாஜக புறம் தள்ளியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் தினகரன் தேடிப்போய் அசிங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக