சனி, 8 ஜூலை, 2017

சீனா எச்சரிக்கை : இந்தியாவில் உள்ள சீனர்கள் அவதானமாக இருக்கவும் ...


Veera Kumar பீஜிங்: இந்திய-சீன எல்லையியல் போர் பீதி நிலவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சீனா அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தனது நாட்டு குடிமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சீனா ஒரு பயண ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள சீன குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உள்ளூர் பாதுகாப்பு நிலைமைக்கு மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள சீன தூதரகம் இதை அறிவித்துள்ளது. பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகம் இந்தியாவிற்கு, வருகை தரும் சீன சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2003ல் 21,152 என்ற அளவில் இருந்ததாகவும், 2013 இல் அதுவே 2 லட்சத்திற்கும் அதிகமானதாக கூடிவிட்டதாகவும் கூறுகிறது. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் சீன நாட்டவர்களை பணியாட்களாக நியமித்துள்ளன. குறிப்பாக ஹோட்டல் தொழிலில் இவர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவும், சீனாவும் எல்லைப் பகுதியில் ராணுவத்தினரை அதிகரித்துள்ளது. பூட்டான் மக்கள் விடுதலைப் படைகள் இந்தியாவின் 'கோழி கழுத்து' சந்திக்கு நெருக்கமான இடத்தில் ஒரு சாலையை உருவாக்குவதை இந்திய ராணுவம் எதிர்த்தது. சீனாவின் சாலை கட்டுமானத்தை நிறுத்த பூட்டான் சார்பில் ஜூன் 16 அன்று இந்திய ராணுவத்தினர் களமிறங்கினர். கோழி கழுத்து சந்திப்பு என்பது, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து விட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் பகுதியாகும். tamiloneindia

கருத்துகள் இல்லை: