Special Correspondent FB Wing
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், கடந்த 30ம்
தேதி ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்ட்தில் ஈடுபட்டனர். அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் போடப்பட்டிருந்த முள் செடிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் இடையே கதிராமங்கலத்தில் 'சுமூக நிலை நிலவுகிறது' என்று முதலமைச்சர் கூறியிருப்பது நடைபெற்ற போலீஸ் அராஜகத்தை மறைக்கும் முயற்சி என்றும் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் "டிரென்ட்" ஆகிவிட்டது என்றும் திமுக செயல்தலைவர் M. K. Stalin தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும் பள்ளிக்கு செல்லாமல் வாயில் கருப்பு துணி கட்டி அமைதி ஊர்வலம் சென்றனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக