கோவை காந்திபுரம் 100அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின்
மாவட்டக்குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம்
17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர்.
அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. இதில் காரின் ஒரு பகுதி
மற்றும் அலுவலக ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் கோவையில் பெறும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள்
அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக
சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை
அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் பகுதியில்
பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஎம் அலுவலகம் மீது வன்முறைதாக்குதல் மூலம் பழிதீர்க்க முடிவு செய்து ஒரு குழுவாக இயக்கியிருக்கின்றனர் என்கிறது தீக்கதிர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணக்குமார் ஏற்கனவே இது போன்று பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. thetimestamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக