Gajalakshmi
டெல்லி: ஜூலை6ம் தேதி புதிய இந்திய தலைமை தேர்தல்
ஆணையராக பொறுப்பேற்க உள்ள அச்சல் குமார் ஜோதியின் பணி விவரங்களை பார்க்கலாம். 64 வயது அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் துவங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை, கண்ட்லா துறைமுக அறக்கட்டளை தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார் ஜோதி. 2013ம் ஆண்டு வரை குஜராத் மாநில தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர்.
தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குஜராத் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பதவி அமர்த்தப்பட்டார். 2015ம் ஆண்டு மே மாதம் மூன்று இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக ஜோதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய இந்திய தலைமைத்தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஆணையராக ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்ற இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில் இருக்கும் நிலையில், குஜராத் மாநில ஐஎஎஸ் அதிகாரி ஒருவர் தேர்தல் ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்திற்கும் வராமல் போகவில்லை. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக