சனி, 8 ஜூலை, 2017

சத்திரபதி சிவாஜியை விஷம் வைத்து கொன்ற பார்பனர்கள் வரலாறு .... வீரசிவாஜியும் ஆரியப் பகைவர்களும்


By Krishnavel T S  சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள்
சத்ரபதி சிவாஜி என்ற மாபெரும் மராட்டிய மன்னனை நாம் எல்லோரும் அறிவோம், ஆனால் அவன் தன உடன் வைத்திருந்த பார்பனரால், பட்ட துன்பம் நிறைய பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.
1627-ல் பிறந்து 1680--ல் இறந்தவர் சிவாஜி, 52 வயது வரையே வாழ்ந்த அவரின் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பான திரைப் படத்துக்கு ஒப்பானது. அவரது முழு பெயர் சிவாஜி ராஜே போன்ஸ்லே
அவரது சிறு வயது காலம், வறுமை என்று சொல்ல முடியாது என்றாலும், தந்தை இல்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை. அவரது தந்தை சாஹாஜி ராஜே போன்ஸ்லே, அஹமதுநகர் சுல்தானின் கீழ், பூனே மற்றும் சுபே ஆகிய இரண்டு நகரத்துக்கு ஜாகிர்தாராக (ஜமீன்தாருக்கு ஒரு படி மேலே) இருந்தார். சுல்தானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், பதவி இழந்து, பீஜாப்பூர் சுல்தானிடம், பின்னர் சேர்ந்தார், பின்னர் இஸ்லாத்துக்கு மதம் மாறி சுல்த்தானின் தங்கையை மணந்து, பெங்களூரில் கர்நாடகத்தின், பீஜாப்பூர் சுல்த்தானின் ஜாகிர்தாராக பணியாற்றி இஸ்லாமியராகவே மறைந்தார்.
சிவாஜி பிறந்த முதல் 4-5 வருடங்கள், அவர் தந்தை, பதவி இழந்து அலைந்து கொண்டிருந்த காலம், பின்னரும் அவர் தந்தை, பூனேவில் தாங்கமுடியாமல், நிரந்தரமாக, பீஜாப்பூரில் இருக்கவேண்டிய சூழல், பின்னர் அவர் தன குடும்பத்தை பார்க்க வரவேயில்லை.
ஆக பிறந்தது முதல் சிவாஜி தாயாரின்(ஜிஜாபாய்) பிள்ளையாகாவே வளரவேண்டிய சூழல், அவர்களுக்கு துணையாக, அவர் தந்தையின் ராஜகுருவான சமார்த் ராமதாஸ் என்ற பார்ப்பனர், சொத்துக்களையும், வயல்களையும் கணக்கு பார்க்கும் வேலை பார்த்துவந்தார். சிவாஜியி படிப்பு மற்றும் போர்களை பயிற்சிகள் தடோஜி கொண்டதேவ் என்ற அவர் தந்தையின் தளபதியின் மூலம்
அவருக்கு 12 வயது இருக்கும் போது, பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே அவரது அண்ணன் சாம்பாஜி, தம்பி எக்கோஜி இருவருடன் கல்வி மற்றும் போர்களை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 13 வயதில் சாய்பாய்யுடன் திருமணம்.

15 வயதில் தொரனா கோட்டை, என்ற கோட்டையை அந்த கோட்டை தலைவனிடம் கைப்பற்றுகிறார்.(மிரட்டியோ, லஞ்சம் கொடுத்தோ), அதை தொடர்ந்து, சக்கன், கண்டார்பி, கொண்டானா மற்றும் பெங்களூரு கோட்டைகளையும் கைப்பற்றுகிறான். கோபம் அடைந்த பீஜாப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தை சாஹாஜியை கைது செய்கிறான், சிவாஜியும் வேறு வழியின்றி தொரனா, சக்கன் கோட்டை தவிர பிறவற்றை சுல்த்தானிடம் ஒப்படைக்கிறார்.
அதன் பின் சுமார் 10 வருடங்கள், அவர் அமைதியாகவே இருக்கிறார், 1665- அவர் தந்தை இறக்கும் வரை, அதன் பின் முழு மூச்சாக கோட்டைகளை பிடிக்கும் வேலைகளில் இறங்குகிறார், சிவாஜியை ஒரு பெரிய சக்தியாக கருதாமல், எதோ ஒரு உள்ளூர் கலவரம் என்பது போல எண்ணி சுல்தான், கலவரத்தை அடக்க அப்சல்கான் என்னும் தளபதியை அனுப்புகிறான், அவனுக்கு நிகழ்ந்த கதை எல்லோருக்கும் தெரியும்.
தன் 15 வயதில் தொடங்கிய போராட்டம் சுமார் 32 வருடங்கள் தொடர்ந்தது.வெறும் 2 கோட்டைகளில் தொடங்கிய சிவாஜியின் வேட்டை 1674-ல் 370 கோட்டைகளாக விரிந்தது, இவைகளின் நடுவே பல போர்கள், மொகலாயர்களுடன், சில சமரசங்கள், எல்லாம் இருந்தும், அவரை எல்லோரும் ஒரு ஜமீன்தார், ஜாகிர்தார் என்ற அளவிலேயே பார்த்தனர்,
சிவாஜி இந்து மன்னனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும், தன் படைகளில், சூத்திரர், தாழ்த்தப்பட்டவர், பிராமணர், ஆப்கான் இஸ்லாமியர், போர்த்துகீசியர் என பல தரப்பட்ட மக்களை சேர்த்துக்கொண்டு எல்லோரையும் சமமாகவே நடத்தினார். 370 கோட்டைகளுக்கு தலைவன் என்றாலும், தன்னை பிற நாட்டினர் படை தலைவன் போலவே பார்ப்பதால் தன்னை மன்னனாக அறிவித்து முடி சூட்டிக் கொள்ள நினைத்து, தன் ராஜகுருவான ராமதாஸாரை அணுகினான்.
பார்ப்பன கோர நாக்குகள் வெளி வந்தன. குரு ராமதாசர் கூறியது என்ன தெரியுமா. சிவாஜி நீ ஒரு சூத்திரன், வேதமரபுப்படி ஒரு பிராமணன் அல்லது ஒரு சத்திரியன் இந்த இருவருக்கு தான் மன்னனாக முடிசூட்ட முடியும், நீ சூத்திரன் என்பதால் உனக்கு முடிசூட்ட முடியாது. மேலும் இந்தியாவில் எல்லா சத்ரியர்களும் பரசுராமனால் கொல்லப்பட்டுவிட்டார்கள், எனவே என்னை போல ஒரு பிராமனை மன்னனாக முடிசூட்டிவிட்டு அவனுக்கு தளபதியாக நீ பணி செய்வது தான் வேததர்மம் என்று கூறினார்.
மாராட்டியார்களின் நலனுக்காக மொகலாய சக்கிரவர்த்தி அவுரங்கசீப்புடன் போட்ட அமைதி ஒப்பந்தம் போட்டார் என்று முன்னர் நாம் சொன்ன ஏற்பாட்டிற்கு புராந்தர் கோட்டை ஒப்பந்தம் என்று பெயர், 1665-ல் அது கையெழுத்து இடப்பட்டது, பல நிபந்தனைகள் உண்டு, சிவாஜி ஒத்து கொண்டிருக்கவில்லை என்றால் மிர்சா ராஜா ஜெய்சிங் தலைமையில் வந்த 1,50,000 வீரர்கள் மொத்த மாராட்டியத்தையும் ரத்த ஆற்றில் மிதக்க விட்டுயிருப்பார்கள்,
அந்த நிபந்தனைகளில் முக்கியமான சில:
1. 23 கோட்டைகளையும், 4,00,000/- ரூபாய் பணமும் கொடுக்க வேண்டும்
2.. சிவாஜியின் படைகள் அவுரங்கசீப்புடன் சேர்ந்து பிஜப்பூர் சுல்தானை எதிர்த்து போராட வேண்டும்
3. சிவாஜியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான நேதாஜி பால்கர் முகலாய படைகளுடன் சேர்ந்து ஆப்கனிஸ்தான் சென்று 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். அங்கே இவர் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டார், 10 ஆண்டுகளுக்கு பின் வந்த அவரை சிவாஜி இந்துவாக எல்லோரையும் ஏற்று கொள்ள செய்தார்
4. சிவாஜியின் மகன் சாம்பாஜி, முகலாயர், தர்பாரில் ஒரு சர்தார் ஆக (தளபதி) பணி புரிய வேண்டும், அவர்கள் போதும் என்று சொல்லும் வரை, இந்த மகன் சிவாஜி இறந்த பின் தான் புனேவுக்கு வந்தார்
5.சிவாஜியின் பேரன் சாஹுஜி, முகலாயரின் அரசு விருந்தினராக (மரியாதைக்குரிய கைதியாக) அவர்கள் போதும் என்று சொல்லும் வரை இருக்கவேண்டும். இந்த பேரன் அவுரங்கசீப் இறந்த பின் தான் விடுவிக்கப்பட்டார்
சிவாஜி மறுத்திருந்தால் மராட்டிய மண்ணே ரத்த பூமியாக மாறியிருக்கும், தலைவனாக செய்தவைகளை விட ஒரு தனி மனிதனாக தன் மகன், பேரன் வரை இழந்து பிரிந்து நாட்டுக்காக துன்பப்பட தியாகம் செய்த தலைவன், அரசனாக முடிசூட்டி கொள்ள கேட்டால், இந்த பார்ப்பனர் சொன்னது தான் நீ சூத்திரன், உனக்கு வேததர்மம் படி முடிசூட்ட முடியாது வேண்டுமானால் ஒரு பிராமனை மன்னனாக முடிசூட்டிவிட்டு அவனுக்கு தளபதியாக நீ பனி செய்.
இத்தனைக்கும் இப்படி சொன்ன ராஜகுரு ராமதாசருக்கு பராலி என்ற கோட்டையை மொத்தமாக ஒரு அரசனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடன் சிவாஜி கொடுத்திருந்தான், பிற்காலத்தில் ஸாஜான்காட் என பெயர் மாற்றப்பட்டு இன்றும் அதே பேருடன் இருக்கிறது ஆங்கிலேயர் காலத்துக்கு பின்னும் இன்றும் அதே குடும்ப வாரிசுகள் அங்கே அரச போகத்துடன் இருக்கிறார்கள், அந்த பேராசைக்கார ராமதாஸரின் சமாதியும் அங்கு இன்றும் இருக்கிறது.
இந்த நேரத்தில் தான் சிவாஜியின் நண்பன், அவர் தளபதிகளில் ஒருவரான பாலாஜி அவ்ஜி என்பவர் துணைக்கு வந்தார். இவர் மீது ஏற்கனவே பார்ப்பனர் எல்லோரும் சேர்ந்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல் போன்ற காரியத்தை மறைமுகமாக செய்து வந்தனர், இவர் செய்த தவறு வேறு போன்றும் இல்லை, பிராமணன் அல்லாத தன் மகனுக்கு பூணூல் போட்டு வேதம் கற்று கொடுத்தது தான் அந்த குற்றம்.
இவர் காசி நகரத்திலிருந்து காக பட்டர் என்ற ஒரு பிரபலமான வேதியர் ஒருவரை அழைத்து வந்தது, சிவாஜியின் முன்னோர்கள், ராஜஸ்தானில் உள்ள மேவார் பகுதியை சேர்ந்த சூர்ய வம்ச அக்னி குல சத்திரியர் என்று சொல்லவைத்து, அவர்முலமாகவே சிவாஜிக்கு வேதமரபுப்படி சத்ரியனாக மராட்டிய சக்கரவர்த்தியாக முடிசூட்டி வைத்தார், இந்த காரியத்துக்கு அந்த காசி பார்ப்பனன் வாங்கிய லஞ்சம் 1 கோடி ரூபாய், அவுரங்கசீப்புடன் போட அமைதி ஒப்பந்தத்திற்கே 4 லட்சம் தான் சிவாஜி கொடுத்தார்.
அப்படியும் உள்ளூர் பார்ப்பனர் ராமதாஸரின் தலைமையில் இதை முழுமையாக ஏற்கவில்லை. சிவாஜியின் மூன்றாவது மனைவி, சோயிரா பாய், மூலம் அவருக்கு மெல்ல கொல்லும் விஷத்தினை கொடுத்து வந்தனர், ஒரு காலகட்டத்தில் சிவாஜியின் உடல் நிலை மோசமாகி கொண்டே செல்ல, இந்த பார்ப்பனர், சூத்திரனாகிய நீங்கள் சத்திரியன் போல முடிசூட்டி கொண்டதால் தான் தெய்வ குற்றமாகி தங்கள் உடல் நிலை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி சொல்லி அவரை அதற்காக வேறு சில பரிகார பூஜைகளை செய்ய வைத்தனர்.
கடைசியில் தன 52-ஆவது வயதில் 1680-ல் (ஒரு அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் வயதா இது) ஒரு விதமான மர்மக்காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் உயிரிழந்தார்.
அதன் பின் அவரது மகன் சாம்பாஜி சிலகாலம் ஆட்சி செய்து பின் பீஜாப்பூர் சுல்தான் உடனான போரில் 1689-ல் இறக்க, சிவாஜியின் மூன்றாவது மனைவி, சோயிரா பாய்-யின்(விஷம் வைத்த மனைவி) மகன் ராஜாராமும் அவர் இறந்தபின் அவர் மனைவி தாரா பாய்-யும் ஆண்டனர்.
1707-ல் அவுரங்கசீப் இறந்த பின் அதுவரை 27 ஆண்டுகளாக டில்லியில் அரச கைதியாக இருந்த சிவாஜியின் பேரன் சாஹுஜி விடுவிக்கப்பட்டார் பின் அவர் அரசனாக பொறுப்பேற்றார்.
1707-1749 வரை ஆண்ட இவர், பாலஜி விசுவநாத பட் என்ற பார்ப்பனனை பேஷுவா (பிரதமமந்திரி) என்ற பதவியில் நியமித்து மொத்த ஆட்சி அதிகாரத்தை அவரிடம் கொடுத்த பின் தான் மராட்டிய மன்னர்களை பார்ப்பனர் நிம்மதியாக வாழ விட்டனர். அதன் பின் மராட்டியரின் சாம்ராஜ்யத்தின் வரலாறு பேஷுவாக்களின் வரலாறாக மாறிவிட்டது,
இந்த பேஷுவாக்களின் ஆட்சி 1713-ல் பாலாஜி விஸ்வநாத பட் காலத்தில் தொடங்கி பலமுறை ஆங்கிலேயரிடம் அடி பட்டு மன்னிப்பு கேட்டு கேட்டு தொடர்ந்தது இறுதியாக 1857-ல் நானா சாஹிப் காலத்தில் முடிவுக்கு வந்தது, மன்னர்களான போன்ஸ்லே-கள் (சிவாஜியின் வாரிசுகள் வெறும் பெயருக்கு மட்டுமே மன்னர்களாக இருந்தனர்) அதனால் தான் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் மராட்டியரின் சாம்ராஜ்யத்தை இவ்வளவு தூக்கி பிடிப்பதன் ரகசியம்.
மேலே சொன்ன வரலாற்றுக்கு சான்று வேண்டுவோர், அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" நூலையும், அண்ணல் அம்பேத்கர் எழுதிய "யார் சூத்திரன்" நூலையும் படிக்கவும்.
மேலதிக தகவல் அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" மேடை நாடகமாக அரங்கேறியபோது, அதில் காகபட்டர் வேடத்தில் அறிஞர் அண்ணா-வே நடித்தார், சிவாஜியாக வி.கணேசன் என்ற புதுமுக நடிகர் நடித்தார், அந்த நாடகத்தை நேரில் கண்ட தந்தை பெரியார், அந்த புதுமுக நடிகரின் திறமையை பாராட்டி அவருக்கு சிவாஜி கணேசன் என புது பெயர் சூட்டினார்.

1 கருத்து:

பாரதி கண்ணம்மா சொன்னது…

கடைசியில் வச்சாம்பாரு ஆப்பு 🤣🤣🤣


ஆதாரம்...அண்ணாதொர எழுதிய புத்தகமாம்.. அண்ணாதுரை என்ன வரலாற்று ஆசிரியரா? வெறும் நாடக வசனம் எழுதறவன் வைத்துக்கொண்டு வரலாறு எழுதுறானுங்க🤣