இன்று இஸ்ரேல் செல்கின்றார் மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் அவர்தான்
இஸ்ரேல் என்பது முக்கியமான நாடு என்றாகிற்று மறுப்பதற்கில்லை ஆனால் அதனை கையாள்வது என்பது மகா சிக்கலான ஒன்று
இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாக்கபட்டாலும் நெடுநாள் இந்தியா அதனை அங்கீகரிக்கவில்லை, அது பாலஸ்தீன் பக்கமே இருந்தது, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இந்திய நிலைப்பாடு
பல்வேறு காரணங்கள் அதற்கு உண்டு, இஸ்ரேல் நிச்சயமாக அமெரிக்காவின் இன்னொரு முகம், இந்திய வளர்ச்சியினை அமெரிக்கா ஒருபோதும் அனுமதித்ததில்லை, பாகிஸ்தானை சீண்டி இந்தியாவிற்கு செக் வைக்கும் வேலையினை எந்நாளும் அது செய்துகொண்டே இருக்கும்
இஸ்ரேல் உறவும், அமெரிக்க்க உறவும் ஒன்றுதான் . ஒரு நாட்டுடன் பேசினால் போதாதா?
இன்னொன்று மகா முக்கியமானது
ஆண்டவன் பெரும் குதர்க்கவாதி, இஸ்ரேலியருக்கு பெரும் அறிவினை கொடுத்தாலும், எண்ணெய் வளத்தை அவன் அரேபியருக்கே கொடுத்திருக்கின்றான்
இஸ்ரேலோடு உறவுபாராட்டும் எல்லா நாடுகளையும் அரபு நாடுகள் ஒரு மாதிரிதான் பார்க்கும், அமெரிக்காவினை
தவிர எந்த நாடும் இஸ்ரேலை ஒரு பக்கமும் அரபுநாடுகளை இன்னொரு பக்கமும் கைபிடித்தபடி நடக்க முடியாது, அதன் பலம் அப்படி
இந்திராவிற்கோ, ராஜிவிற்கோ, நரசிம்மராவ், மன்மோகன் சிங்கிற்கோ இஸ்ரேலுக்கு செல்ல வழி தெரியாமலோ அல்லது விமானம் கிடைக்காமலோ செல்லாமல் இருக்கவில்லை
இஸ்ரேலிய மொசாத்தும் சிஐஏவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக செய்த காரியங்கள் கொஞ்சமல்ல, இதனால்தான் அன்றைய இந்தியா அப்பக்கம் செல்லவில்லை,
பாலஸ்தீனத்தை இந்தியா ஆதரிக்கின்றது என்பதற்காக, பாகிஸ்தான் இலங்கை விஷயங்களில் எல்லாம் தலையிட்டு இந்தியாவின் சில அரசியல் கொலைகள் வரை இஸ்ரேலிய கரங்கள் நீண்டதும் யாரும் மறக்க முடியாது
இஸ்ரேலோடு உறவு பாராட்டினால் அது இந்திய எண்ணெய் இறக்குமதி வரை பாதிக்கும், பாகிஸ்தானை கண்காணிக்க அதன் அண்டை நாடான ஈரானோடு நாம் செய்திருக்கும் உறவுகளை, ஈரானின் எண்ணெய் இறக்குமதியினை எல்லாம் பாதிக்கும்.
ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முட்டிகொண்டிருக்கும் வேளையில் இந்தியா இஸ்ரேலோடு நெருங்கினால் ஈரானியரின் கோபம் கூடும், அது இந்தியாவிற்கு நல்லதல்ல
ஈரான் மட்டும் அல்ல, எல்லா எண்ணெய்வள அரபுநாடுகளுமே இந்தியாவினை முறைக்கும்
கிட்டதட்ட 80 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கும் பணியாளருக்கும் அரபுநாடுகள் வேலை கொடுத்திருக்கின்றன
இஸ்ரேலுக்கும் ரஷ்யாவிற்கும் அவ்வளவு பொருந்தாது, இஸ்ரேலிய தொழில்நுட்டபத்தை இந்தியா இறக்குமதி செய்தால் ரஷ்யா பாகிஸ்தானுடன் கைகோர்க்கும், சும்மாவே அது அப்படித்தான் பயமுறுத்துகின்றது
இஸ்ரேல் என்பது தொழில்நுட்பத்தில் , பல விஷயங்களில் சிறந்த நாடுதான், ஆனால் சில விஷயங்களை ரகசியமாகத்தான் செய்யவேண்டும்
நாங்கள் புது இந்தியா படைப்பது போல, புது உலகம், புது மேற்காசியா படைப்போம் என பகிரங்கமாக இஸ்ரேல் உறவு என இறங்கினால் நிலமை சிக்கலாகும்
சும்மாவே இந்தியா மீது கோபத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலோடு இந்தியா கைகுலுக்குவது அதன் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதாகும் என வெறியில் கிளம்பும்
நிச்சயமாக சொல்லலாம் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தபோகும் விஷயம் இது
ஆனால் இஸ்ரேல் கில்லாடி என்பதை மறுமுறையும் நிரூபித்துவிட்டது
ஒரு பெரிய நாடு காஷ்மீர் சர்ச்சை முதல் பாபர் மசூதி இடிப்பு வரை உலகளாவில் சிக்கலான, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் பாகிஸ்தானின் வன்ம பிரச்சாரத்தினை மிக கவனமாக எதிர்கொண்ட இந்தியாவினை சிக்கலில் இழுத்துவிட்டது
"ஆம் அவர்கள் இஸ்லாமிய எதிரிகள்தான் அதனால் நாங்கள் இருவரும் ஒன்றாகிவிட்டோம்
காஷ்மீர் இந்தியாவின் பகுதி, அப்படியே பாலஸ்தீனமும் இஸ்ரேலில் ஒரு பகுதி "என ஒரே போடாக போட தயாராகின்றது
இன்னும் ஒருபடி மேலே சென்று "இந்தியாவில் ராமர் கோவில் கட்டபடபோவது போல, ஜெருசலேமில் யூத ஆலயம் கட்டபடும்" என மோடி அருகில் இருக்கும் பொழுது நேத்தான்யாகு அறிவித்து தொலைந்தால் மூன்றாம் உலகப்போருக்கு சங்கு ஊதலாம்
இஸ்ரேலியர் பெரும் தந்திரசாலிகள், அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் பெரும் தந்திரம் ஒளிந்திருக்கும், சும்மா எல்லாம் மோடியினை அழைக்கமாட்டார்கள்
அவர்கள் தந்திர வலையில் சிக்கிவிட்டால் மீள்வது வெகு கடினம், இந்தியா சிக்கிவிட்டது
இந்தியா எனும் யானையினை இஸ்ரேல் எனும் நரி அழகாக குழியில் இழுத்துவிட்டது
இது மோடி சொல்லிவிட்டு கிளம்புவது போல வரலாற்று சிறப்புமிக்க பயணம் அல்ல
மாறாக பெரும் சிக்கலை தொடங்கிவைக்க போகும் நேரம் முகநூல் பதிவு ஸ்டாலின் ராஜன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக